டிரெயின்-ல் ஸ்ருதிஹாசன் பாடிய கன்னக்குழிக்காரா | ரஜினிக்காக மட்டுமே அதை செய்தேன் : சொல்கிறார் உபேந்திரா | மறு தணிக்கைக்கு செல்லும் பராசக்தி | வருட இறுதியில் ஓடிடியில் மகிழ்விக்க வரிசைக்கட்டும் 'புதுப்படங்கள்'..! | குரு சோமசுந்தரம், அனுமோல் இணைந்து நடிக்கும் பாரிஸ் கபே | ஜனநாயகன் படத்தை தெலுங்கில் வெளியிடும் பிரபல நிறுவனம் | ‛ஆசாத் பாரத்' பற்றி நெகிழும் இந்திரா திவாரி | ஜெயிலர் 2 படத்தில் ஷாருக்கான் : உறுதிசெய்த பாலிவுட் நடிகர் | விஜய்யின் வளர்ச்சியை தடுக்க நினைக்கின்றனர் : நடிகை மல்லிகா | இம்மார்ட்டல் படத்தின் டீசர் எப்படி இருக்கு |

முதல் இரு பாகங்களின் மிகப்பெரிய வெற்றிக்கு பிறகு தற்போது 'த்ரிஷ்யம்', மூன்றாம் பாகம் தயாராகி உள்ளது. முதல் இரு பாகத்தை இயக்கிய ஜீத்து ஜோசப் இயக்கி உள்ளார். மோகன்லால், மீனா அன்சிபா ஹாசன், எஸ்தர் அனில், ஆஷா சரத், சித்திக் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனில் ஜான்சன் இசையமைத்துள்ளார். சதீஷ் குரூப் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
விரைவில் இந்த படம் வெளியாக உள்ளது. இந்த நிலையில் படத்தின் உலகளாவிய திரையரங்கு மற்றும் டிஜிட்டல் உரிமைகளை பனோரமா ஸ்டுடியோஸ் மற்றும் பென் ஸ்டுடியோஸ் இணைந்து பெற்றுள்ளது. படம் பெரிய தொகைக்கு விற்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. ஆனால் தொகை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
இதுகுறித்து மோகன்லால் கூறும்போது “என் எண்ணங்களிலும், பார்வையாளர்களின் உணர்ச்சிகளிலும், வரிகளுக்கு இடையிலான அமைதியிலும் ஜார்ஜ்குட்டி கடந்த நான்கு வருடங்களாக என்னுடன் பயணிக்கிறார். அந்த கதாபாத்திரத்தில் மீண்டும் நடிப்பது புதிய ரகசியங்களுடன் என் பழைய நண்பரை சந்திப்பது போல உணர்கிறேன். இந்தமுறை அவரது பயணம் எங்கு செல்கிறது என்பதைப் பார்வையாளர்கள் பார்ப்பதற்காக நான் ஆவலாக உள்ளேன்” என்றார்.