டிரெயின்-ல் ஸ்ருதிஹாசன் பாடிய கன்னக்குழிக்காரா | ரஜினிக்காக மட்டுமே அதை செய்தேன் : சொல்கிறார் உபேந்திரா | மறு தணிக்கைக்கு செல்லும் பராசக்தி | வருட இறுதியில் ஓடிடியில் மகிழ்விக்க வரிசைக்கட்டும் 'புதுப்படங்கள்'..! | குரு சோமசுந்தரம், அனுமோல் இணைந்து நடிக்கும் பாரிஸ் கபே | ஜனநாயகன் படத்தை தெலுங்கில் வெளியிடும் பிரபல நிறுவனம் | ‛ஆசாத் பாரத்' பற்றி நெகிழும் இந்திரா திவாரி | ஜெயிலர் 2 படத்தில் ஷாருக்கான் : உறுதிசெய்த பாலிவுட் நடிகர் | விஜய்யின் வளர்ச்சியை தடுக்க நினைக்கின்றனர் : நடிகை மல்லிகா | இம்மார்ட்டல் படத்தின் டீசர் எப்படி இருக்கு |

'உன்னை சரணடைந்தேன்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் மீரா வாசுதேவன். அதன் பிறகு 'அறிவுமணி, ஜெர்ரி, கத்திக்கப்பல், ஆட்டநாயகன், அடங்கமறு' படங்களில் நடித்தார். 'காவேரி', 'பெண்', 'சித்தி-2' உள்ளிட்ட சில சின்னத்திரை சீரியல்களிலும் நடித்தார்.
ஒளிப்பதிவாளர் அசோக்குமாரின் மகன் விஷால் அகர்வால் நடிகர் ஜான் குகைன் மற்றும் விபின் ஆகியோரை திருமணம் செய்து கொண்டவர் மூவரையுமே விவாகரத்து செய்துவிட்டார். சில நாட்களுக்கு முன்பு 'நான் இப்போது சிங்கிள்' என்று ஸ்டேட்டஸ் போட்டிருந்தார்.
இப்போது அவர் இந்த விவாகரத்துகள் குறித்து பேசி இருக்கிறார். அவர் கூறியிருப்பதாவது: எனக்கு மட்டும்தான் என்னோட வலி, வேதனை தெரியும். நான் தேர்ந்தெடுத்ததுக்கும் அதற்கான முடிவுக்கும் நான்தான் பொறுப்பு. என் வாழ்க்கையில இருந்தவர்களை பற்றி நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை. என்னோட நம்பிக்கைதான் தவறாகி இருக்கிறது. இது எல்லாவற்றுக்கும் ஒரே வழி, கடந்து போறதுதான்.
சமூக வலைதளங்களில் கருத்து சொல்ல எல்லோருக்கும் உரிமை இருக்கிறது. அந்த விமர்சனங்கள், தாக்குதல்கள், ஜட்ஜ்மென்ட்கள் என்னை பாதிக்காது. எனக்கு என் குடும்பம் துணையாக இருக்கிறது. பாசிட்டிவ்வான மனிதர்கள் சூழ இருக்கும்போது, யாருடைய விமர்சனங்களும் பாதிக்காது.
பிரிவுகள் வலி மிகுந்தவை. அதோட பாதிப்பு நமக்கு கடைசி வரைக்கும் இருக்கும். நான் எல்லா நெகட்டிவையும் பாசிட்டிவா எடுத்துக்கிறேன். விவாகரத்து ஆனவங்க ஏற்கெனவே வலியில இருப்பாங்க. அவங்ககிட்ட கனிவோடு இருங்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.