டிரெயின்-ல் ஸ்ருதிஹாசன் பாடிய கன்னக்குழிக்காரா | ரஜினிக்காக மட்டுமே அதை செய்தேன் : சொல்கிறார் உபேந்திரா | மறு தணிக்கைக்கு செல்லும் பராசக்தி | வருட இறுதியில் ஓடிடியில் மகிழ்விக்க வரிசைக்கட்டும் 'புதுப்படங்கள்'..! | குரு சோமசுந்தரம், அனுமோல் இணைந்து நடிக்கும் பாரிஸ் கபே | ஜனநாயகன் படத்தை தெலுங்கில் வெளியிடும் பிரபல நிறுவனம் | ‛ஆசாத் பாரத்' பற்றி நெகிழும் இந்திரா திவாரி | ஜெயிலர் 2 படத்தில் ஷாருக்கான் : உறுதிசெய்த பாலிவுட் நடிகர் | விஜய்யின் வளர்ச்சியை தடுக்க நினைக்கின்றனர் : நடிகை மல்லிகா | இம்மார்ட்டல் படத்தின் டீசர் எப்படி இருக்கு |

ஸ்டோன் பென்ச் பிலிம்ஸ், ஜீ ஸ்குவாட் சார்பில் கார்த்திகேயன், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இணைந்து தயாரித்துள்ள படம் '29'. மேயாத மான், ஆடை, குலு குலு' படங்களை தொடர்ந்து ரத்னகுமார் இயக்கியுள்ளார். விது, பிரீத்தி அஸ்ராணி, அனுஸ்ரீ வேகன், ஸ்ரேயாஸ் பாத்திமா நடித்துள்ளனர். மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்துள்ளார், ஷான் ரோல்டன் இசை அமைத்துள்ளார். ப்ரீத்தி அஸ்ராணி சில காட்சிகளில் நடிக்க மறுத்ததாகவும் இதற்காக கதையை மாற்றியதாகவும் கூறப்பட்டது.
இது குறித்து இயக்குனர் ரத்னகுமார் கூறும்போது "பிரீத்தி அஸ்ரானியிடம் கதை சொன்னேன். சில காட்சிகள் நெருடலாக இருப்பதால், நடிக்க மனம் வரவில்லை' என்றார். அவர் மறுத்ததால் திரைக்கதையில் சில மாற்றங்களை செய்தேன். அதற்குபிறகு படத்தின் தோற்றம் மாறிவிட்டது. 'நோ' சொன்ன அவருக்கு நன்றி" என்றார்.