டிரெயின்-ல் ஸ்ருதிஹாசன் பாடிய கன்னக்குழிக்காரா | ரஜினிக்காக மட்டுமே அதை செய்தேன் : சொல்கிறார் உபேந்திரா | மறு தணிக்கைக்கு செல்லும் பராசக்தி | வருட இறுதியில் ஓடிடியில் மகிழ்விக்க வரிசைக்கட்டும் 'புதுப்படங்கள்'..! | குரு சோமசுந்தரம், அனுமோல் இணைந்து நடிக்கும் பாரிஸ் கபே | ஜனநாயகன் படத்தை தெலுங்கில் வெளியிடும் பிரபல நிறுவனம் | ‛ஆசாத் பாரத்' பற்றி நெகிழும் இந்திரா திவாரி | ஜெயிலர் 2 படத்தில் ஷாருக்கான் : உறுதிசெய்த பாலிவுட் நடிகர் | விஜய்யின் வளர்ச்சியை தடுக்க நினைக்கின்றனர் : நடிகை மல்லிகா | இம்மார்ட்டல் படத்தின் டீசர் எப்படி இருக்கு |

பிரதீப் ரங்கநாதனிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த மரியா இளஞ்செழியன் இயக்குநராக அறிமுகமாகும் படம். 'ஹேப்பி ராஜ்'. பியாண்ட் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. ஜி.வி.பிரகாஷ் அப்பாஸ், ஜார்ஜ் மரியான், கவுரி ப்ரியா, ப்ரார்த்தனா, அதிர்ச்சி அருண், மதுரை முத்து, சோஃபா பாய் ரசூல் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.
படம் குறித்து இயக்குநர் மரியா இளஞ்செழியன் கூறும்போது, "ஹேப்பி ராஜ் என்ற தலைப்பு ஒரு எளிய ஆனால் ஆழமான சிந்தனையில் இருந்து உருவானது. சினிமாவை மகிழ்ச்சியின் கொண்டாட்டமாக மாற்ற வேண்டும் என்ற விருப்பம். நாயகனுக்கு 'ஹேப்பி' என்று பெயர் வைக்கப்பட்டதற்குக் காரணம் இருக்கிறது. அந்த பெயர் கதையின் மைய உணர்வை எப்போதும் நினைவூட்டும் ஒரு குறியீடு ஆகும்.
இளைஞர்கள், குடும்பங்களைத் திருப்திப்படுத்த வேண்டும் என்பதுதான் என் அடிநாதமாக இருந்தது. இப்போது சந்தோஷமான பேமிலி படங்கள் அதிகம் வருவதில்லை. இளைஞர்களின் மனப்பாங்கில் இருந்து ஒரு குடும்பக் கதை சொல்வதற்கான திட்டம்தான் இந்தப் படம். ஹேப்பி ராஜ் என்கிறவன் பிறந்ததிலிருந்து 25 வயது வரைக்கும் அவன் எதிர்கொள்கிற ஜாலியான பிரச்னைகள், காதலுக்குள்ளே ஒரு ட்ராவல் என கிராமம், நகரம் என இரண்டு பண்பாடுகளைச் சேர்த்துப் பார்க்கிற படம்.
இரண்டு குடும்பத்திற்குள் நடக்கிற வேடிக்கைகள், அவர்களின் பழக்கவழக்கங்கள் எல்லாம் வேறு வேறு திசையில் செல்கிற விதம் சுவாரஸ்யமாக இருக்கும். எங்கே பார்த்தாலும் நிறைந்திருக்கிற நெகட்டிவிட்டியை மாற்றி சந்தோஷமா போகிற கதை. ஆட்டம், பாட்டம், ஊர்த் திருவிழா மாதிரி இருக்கும். மிடில் கிளாஸ் சென்டிமென்ட், எமோஷனல், சந்தோஷம்னு செம ஜாலியாகப் போகும். உறவுகள் புடைசூழ, ஒற்றுமையாக இருக்கிற பேமிலியாக இருந்தால் எப்படி இருக்கும்னு சொல்லியிருக்கோம்" என்றார்.