நிலத்தில் உழவு செய்த சல்மான் கான், தோனி | பாதிக்கப்பட்டவரை குற்றம் சாட்டுவதா ? நிதி அகர்வால் கமெண்ட் | ஆக் ஷன் மோடில் ராஷ்மிகா : மைசா முன்னோட்டம் வெளியீடு | கேரளாவில் பஹத் பாசிலை சந்தித்த பார்த்திபன் ; அதிரவைத்த பாசில் | கவுரவ காதல் கொலை பின்னணியில் உருவாகும் 'புகார்' | பிளாஷ்பேக்: சினிமா புறக்கணித்ததால் நாடகத்துக்கு திரும்பிய நடிகர் | 55வது படத்தை தன் கைவசப்படுத்திய தனுஷ் | 'திரிஷ்யம் 3' படத்திலிருந்து விலகிய அக்ஷய் கண்ணா ; சம்பள பிரச்னை காரணமா ? | நண்பர்கள் குழப்பியதால் பொருந்தாத கதைகளை தேர்வு செய்தேன் ; நிவின்பாலி ஓப்பன் டாக் | ஆந்திராவில் சினிமா தியேட்டர் டிக்கெட் கட்டணங்களில் மாற்றம்? |

ரஜினிகாந்த் 75வது பிறந்தநாளை முன்னிட்டு , நேற்று ஜெயிலர் 2 படத்தின் அப்டேட் வெளியாகும். படத்தின் சிறப்பு போஸ்டர் அல்லது பாடல் வெளியாகும். ஏதாவது அப்டேட் டை படக்குழு வெளியிடும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் எதுவும் வரவில்லை. இதனால் பலர் அப்செட். என்னாச்சு என விசாரித்தால் பட ரிலீசுக்கு இன்னும் பல மாதங்கள் இருப்பதால் இப்போது எதுவும் வேணாம் என இயக்குனர் நினைத்துவிட்டார். நேற்று படப்பிடிப்பு நடந்ததால் இந்த விஷயத்தில் ஆர்வம் காண்பிக்கவில்லை. ரஜினி தரப்பும் எந்த பிரஷரும் கொடுக்கவில்லை என் கிறார்கள்.
அதேபோல் ரஜினி பிறந்தநாளுக்கு பிரதமர், முதல்வர், எதிர்க்கட்சி தலைவர் உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்த நிலையில் தவெக தலைவரும், நடிகருமான விஜய் மட்டும் வாழ்த்து சொல்லாதது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னையில் நேற்று வீட்டில் இருந்த ரஜினி இன்று திருப்பதியில் சாமி தரிசனம் செய்துள்ளார். படையப்பா ரீ ரிலீசில் வசூல் ஈட்டி வருவதால் ரஜினி மகிழ்ச்சியில் இருக்கிறாராம்.