அஜித்தின் எதிர்கால ஆசை இதுதான்! - ஏ.எல்.விஜய் வெளியிட்ட தகவல் | 'வா வாத்தியார்' தடை விவகாரம்: உச்ச நீதிமன்றமும் ஸ்டுடியோ கிரீனுக்கு கொடுத்த அதிர்ச்சி! | 'அரசன்' படத்தில் இணைந்த ஆண்ட்ரியா! | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி : அறிவிப்பை வெளியிடாத அளவிற்கு சண்டையா? | 2025ல் 'மத கஜ ராஜா' போல 2026ல் 'பார்ட்டி'யா ??? | அடுத்தடுத்து ரிலீஸ் தள்ளிவைப்பு: கவலையில் கீர்த்தி ஷெட்டி | அவதாருக்கு பயந்து அமைதியான தமிழ் சினிமா | மம்மூட்டி...நிவின் பாலி....என வரிசை கட்டும் இந்த வார ஓடிடி ரிலீஸ்.....! | 'ஐ யம் கேம்' படத்தில் இணைந்த கயாடு லோகர்! | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட்! |

ஹிந்தியில் ஆதித்ய தர் இயக்கத்தில் ரன்வீர் சிங் நாயகனாக நடித்து கடந்த டிசம்பர் 5ம் தேதி திரைக்கு வந்த படம் ‛துரந்தர்'. இப்படத்தில் அவருடன் அக்ஷய் கண்ணா, மாதவன், அர்ஜுன் ராம்பால், சஞ்சய் தத், ‛தெய்வத்திருமகள்' புகழ் சாரா அர்ஜுன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்தனர். ஸ்பை கலந்த ஆக் ஷன் படமாக வெளியானது. இப்படம் திரைக்கு வந்ததிலிருந்து ரசிகர்கள் மத்தியில் அமோகமான வரவேற்பு பெற்று வருகிறது. தற்போது இப்படம் ரூ.500 கோடி வசூலை எட்டி உள்ளது. 10 நாளில் ரூ.552.70 கோடி வசூலித்து இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்தியாவில் மட்டும் 430.20 கோடி இப்படம் வசூலித்துள்ளது.