தமிழில் கிடப்பில் போடப்பட்ட பாட்டு மலையாளத்தில் எனக்கு விசிட்டிங் கார்டாக அமைந்தது : வித்யாசாகர் | டிச., 18ல் ‛ஜனநாயகன்' படத்தின் இரண்டாவது பாடல் | ஜெயிலர் வெளியான அதே ஆகஸ்ட் மாதத்தில் வெளியாகும் ஜெயிலர் 2 | சூர்யாவின் இரண்டு படங்களும் ஒரே மாதத்தில் வெளியாகிறதா? | துரந்தர் 2வை உடனே வெளியிடுங்கள் : ஷ்ரத்தா கபூர் வேண்டுகோள் | களம்காவல் வெற்றிக்கு விநாயகனுடன் இணைந்து நன்றி சொன்ன மம்முட்டி | ரிலீஸ் பற்றி வாய் திறக்காத 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' | இயக்குனருக்கு முதல் முறை கார் பரிசளித்த பவன் கல்யாண் | சிக்ரி சிக்ரி : 100 மில்லியனைக் கடந்த ஏஆர் ரஹ்மானின் முதல் தெலுங்குப் பாடல் | எனக்கு சினிமா பசி அதிகம்: சித்தி இத்னானி |

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்த கூலி படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை. என்றாலும், மிகப்பெரிய விளம்பரத்தின் காரணமாக அப்படம் 600 கோடி வசூலித்தது. தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் 2 படத்தில் நடித்து வரும் ரஜினி, இந்த படம் 2026 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வெளியாகும் என்று ஒரு பேட்டியில் கூறியிருந்தார். ஆனால் இப்போது ஜெயிலர்-2 படம் ஆகஸ்டில் வெளியிட்ட இருப்பதாக ஒரு புதிய தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே ரஜினி நடித்த ஜெயிலர் படம் 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியான நிலையில், ஜெயிலர்- 2 படத்தை 2026ம் ஆண்டு ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியிட திட்டமிட்டிருப்பதாக கூறுகிறார்கள். மேலும், ரஜினியுடன் ரம்யா கிருஷ்ணன், மிர்னா மேனன், யோகி பாபு, எஸ்.ஜே.சூர்யா மற்றும் மோகன்லால், சிவராஜ் குமார் ஆகியோர் கெஸ்ட் ரோலில் நடிக்கும் இந்த படத்தில் பாலிவுட் நடிகை வித்யா பாலனும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்த ஜெயிலர்-2 படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் மாதத்தோடு முடிவடைய இருப்பதாகவும் அப்படக்குழுவில் கூறுகிறார்கள்.




