'ரேஸ் நடிப்பு அல்ல.. ரியல்' : அஜித்தின் புதிய வீடியோ வைரல் | ஹிந்தியில் திரிஷ்யம் 3 ரிலீஸ் தேதியை அறிவித்த அஜய் தேவ்கன் | முதல் படம் வெளியாகும் முன்பே சிறை இயக்குனருக்கு கார் பரிசு | நடிகர் மாதவன் பெயர், புகைப்படத்தை அனுமதியின்றி பயன்படுத்த தடை | போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர் ஷைன் டாம் சாக்கோ விடுவிப்பு | துபாய் பயணத்தை ரத்து செய்துவிட்டு நடிகர் சீனிவாசனுக்கு அஞ்சலி செலுத்திய பார்த்திபன் | அவதார் அடுத்த பாகம் பற்றி இப்ப கேட்காதீங்க : ஜேம்ஸ் கேமரூன் | சிவகார்த்திகேயன் தயாரிக்கும் புதிய படம் குறித்த அறிவிப்பு வீடியோ வெளியானது! | பொங்கல் வெளியீட்டில் அனல் பறக்குமா : ஜனநாயகன், பராசக்தி விழாவில் பேசுவார்களா? | தமன்னாவின் 36வது பிறந்தநாள் பார்ட்டியில் பங்கேற்ற மிருணாள் தாக்கூர்! |

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா ஆகியோர் இணைந்து நடித்துள்ள படம் 'பராசக்தி' . இப்படம் 1965ம் ஆண்டு காலகட்டத்தில் நடந்த ஹிந்தி திணிப்பு கதையை மையப்படுத்தி உருவாக்கியுள்ளனர். இப்படம் பொங்கலையொட்டி திரைக்கு வருகிறது.
சுதா கொங்கரா அளித்த பேட்டி ஒன்றில் பராசக்தி படம் எப்படி தொடங்கியது என்பது குறித்து அவர் கூறியதாவது, "5 ஆண்டுகளுக்கு முன்பு 'பராசக்தி' படத்திற்கான ஆரம்பகட்ட பேச்சுவார்த்தை ஆரம்பித்தது. ஜி.வி.பிரகாஷ் என் நண்பர். அவருக்கு 'மண்டாடி' படத்தை இயக்கி வரும் மதிமாறன் நண்பர். ஜி.வி தான் அவர் நல்ல கதைகள் வைத்திருக்கிறார், அவர்கிட்ட பேசுங்கள் என கூறினார். அப்படியே ஆரம்பித்தோம் கதையாக இல்லாமல் ஒரு கான்செப்ட் மாதிரி 1960களின் காலகட்டத்தில் நடைபெறும் கதை, நிகழ்வுகள் எல்லாம் நடந்த வரலாற்றில் இருந்து எடுக்கப்பட்டு இது மாதிரி நிறைய கோர்வையான கதையை புனையப்பட்டு அடிப்படையாக அமைத்து தந்தார் மதிமாறன்" என தெரிவித்துள்ளார்.