நடிகையாக அறிமுகமாகும் சிவரஞ்சனி மகள் | ஹீரோக்களுக்கு இணையாக ஸ்டண்ட் காட்சிகளில் அதிரடி காட்டி மிரட்டிய நடிகைகள் | ‛சினேகா 45' : புன்னகை மாறாத அரசியின் டாப் 10 படங்கள் | ஜெயலலிதா வேடத்தில் நடிக்க திரிஷாவிடம் பேச்சுவார்த்தை: 'புரட்சித்தலைவர் எம்ஜிஆர்' படக்குழு முயற்சி | சிம்பு வெளியிட்ட 'டெலிவரி பாய்' டிரைலர் : ஹீரோ யார் தெரியுமா? | 'சிக்னல் அட் 11:30' கதையை கேட்டதும் ஓகே சொன்னேன்: நடிகை புஜிதா பொன்னாடா | சிவகார்த்திகேயன் 27வது படம் : இன்று முக்கிய அப்டேட் | நயன்தாரா அரசியலுக்கு வருகிறாரா? கணவர் விக்னேஷ்சிவன் சொன்ன பதில் | ரஜினி படத்துக்கு முன்னால் என் படம் ஒரு சிறு புள்ளி : சித்தி இட்னானி | 40 நாட்டு கலைஞர்கள் நடித்துள்ள 'அமெரிக்க ஆவி' |

நலன் குமாரசாமி இயக்கத்தில், கார்த்தி, கிர்த்தி ஷெட்டி மற்றும் பலர் நடிப்பில் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 14ம் தேதி வெளியான படம் 'வா வாத்தியார்'. இப்படம் முதலில் டிசம்பர் 5ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு, பின்னர் டிசம்பர் 12ம் தேதிக்குத் தள்ளி வைக்கப்பட்டது.
படத்தயாரிப்பு நிறுவனமான ஸ்டுடியோ க்ரீன், சென்னை உயர்நீதிமன்ற சொத்தாட்சியரிடம் செலுத்த வேண்டிய சுமார் 21 கோடி ரூபாயை செலுத்திய பின்புதான் படத்தை வெளியிட அனுமதிக்க முடியும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதனால், படத்தின் வெளியீட்டை மீண்டும் தள்ளி வைத்தனர்.
பொங்கலுக்கு முன்பாக அந்தப் பணத்தை செலுத்திய பின்பும், மீதமுள்ள கடன்களை முழுவதுமாக அடைத்த பின்பும், இந்தப் படத்தை பொங்கலுக்கு வெளியிடுகிறேன் என தயாரிப்பாளர் அறிவித்தார். அதன்படி ஜனவரி 14ம் தேதி வெளியானது.
இருப்பினும் படம் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெறாமல் தோல்வியடைந்தது. கார்த்தியின் திரையுலகப் பயணத்தில் மோசமான தோல்வி மற்றும் வசூலைப் பெற்ற படமாக இது அமைந்தது என்றார்கள்.
இந்நிலையில் படம் வெளியான இரண்டு வாரங்களில் நாளை ஓடிடியில் வெளியாகிறது. அமேசான் பிரைம் தளத்தில் நாளை (ஜனவரி 28) வெளியாகும் என அவர்களும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்கள்.
பொதுவாக படம் வெளியான நான்கு வாரங்களில்தான் ஓடிடியில் வெளியாவது வழக்கம். இப்படம் இரண்டு வாரங்கள் முன்னதாகவே வெளியாகிறது.