'காந்தி டாக்ஸ்' முதல் 'வித் லவ்' வரை... இந்த வார ஓடிடி வெளியீடுகள்.. | வருங்கால கணவருக்கு என்னென்ன தகுதிகள் இருக்க வேண்டும்! மீனாட்சி சவுத்ரி வெளியிட்ட தகவல் | வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி: 'துரந்தர்- 2' படத்தின் டிரைலர் நாளை வெளியாகிறது | ஜான்வி கபூரின் பிறந்தநாளில் வெளியிடப்பட்ட பெத்தி பட போஸ்டர்! | யோகி பாபுவின் 'கெணத்த காணோம்' படத்தின் டிரைலர் வெளியானது! | ரஜினி, கமல் இணையும் படம்: லதா ரஜினிகாந்த் சொன்ன தகவல் | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் 'கார்மேனி செல்வம்' புதிய ரிலீஸ் தேதி | மீண்டும் சிரஞ்சீவி படத்திற்கு இசையமைக்கும் தமன்! | என் போட்டோவை மார்பிங் செய்கின்றனர்!: ரச்சிதா ஆதங்கம் | ரொமான்டிக் திரில்லர் கதையில் உருவாகும் 'ஆசை' |

தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் நான்கைந்து படங்கள் வருவது வழக்கமாக உள்ளது. அது இந்த வாரமும் தொடர்கிறது. இந்த வாரம் பிப்ரவரி 13ம் தேதி, “கா - த பாரஸ்ட், மை லார்ட், மைலாஞ்சி, பூக்கி, ஸ்வீட்டி நாட்டி கிரேஸி, தெரிஞ்சா காதலிங்க,” ஆகிய படங்கள் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரமும் இது போலவே நான்கைந்து படங்கள் வெளியான நிலையில் இந்த வாரமும் அது தொடர்கிறது. அனைத்துமே சிறிய பட்ஜெட் படங்கள்தான். இந்த வார வெளியீட்டில் நட்சத்திரப் பிரபலம் என்றால் சசிகுமார் நடித்துள்ள 'மை லார்ட்' படத்தையும், ஆண்ட்ரியா நடித்துள்ள 'கா' படத்தையும் சொல்லலாம்.
இந்த வருடம் ஆரம்பமாகி ஆறு வாரங்கள் ஆக உள்ள நிலையில் இதுவரையில் வந்த படங்களில் 'தலைவர் தம்பி தலைமையில், வித் லவ்' ஆகிய படங்கள்தான் குறிப்பிடும்படியான வசூலைப் பெற்றுள்ளன. இரண்டுமே சிறிய படங்கள்தான். இந்த வாரம் வெளியாக உள்ள படங்களில் எந்த சிறிய படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வரவேற்பைப் பெறும் என்பதற்கு சில நாட்கள் காத்திருக்க வேண்டும்.




