போயஸ் கார்டனில் ரூ.31 கோடிக்கு வீடு வாங்கிய நயன்தாரா, விக்னேஷ் சிவன் | தெலங்கானாவில் பார்க்கிங் கட்டணம் ரத்து : தமிழகத்திலும் ரத்து செய்யப்படுமா ? | 'காந்தி டாக்ஸ்' முதல் 'வித் லவ்' வரை... இந்த வார ஓடிடி வெளியீடுகள்.. | வருங்கால கணவருக்கு என்னென்ன தகுதிகள் இருக்க வேண்டும்! மீனாட்சி சவுத்ரி வெளியிட்ட தகவல் | வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி: 'துரந்தர்- 2' படத்தின் டிரைலர் நாளை வெளியாகிறது | ஜான்வி கபூரின் பிறந்தநாளில் வெளியிடப்பட்ட பெத்தி பட போஸ்டர்! | யோகி பாபுவின் 'கெணத்த காணோம்' படத்தின் டிரைலர் வெளியானது! | ரஜினி, கமல் இணையும் படம்: லதா ரஜினிகாந்த் சொன்ன தகவல் | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் 'கார்மேனி செல்வம்' புதிய ரிலீஸ் தேதி | மீண்டும் சிரஞ்சீவி படத்திற்கு இசையமைக்கும் தமன்! |

வாரம் வாரம் புது வரவுகளை வெளியீடும் ஓடிடி தளங்கள், இந்த வாரம் ரசிகர்கள் எதிர்பார்த்த பல்வேறு புதிய படங்கள் வெளியாகவுள்ளது. 'வித் லவ்' எனத் தொடங்கி 'காந்தி டாக்ஸ்' வரை இந்த வாரம் வெளியாகவுள்ளது.
வித் லவ்
டூரிஸ்ட் பேமிலி படத்தை இயக்கிய அபிஷன் ஜீவிந்த் நடிப்பில் அனஸ்வரா ராஜன், காவ்யா அனில் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளிவந்த திரைப்படம்' வித் லவ். தங்களது பள்ளிப்பருவத்தில் காதலித்தவர்கள் தற்போது என்ன செய்கிறார்கள் என்பதை நாயகன், நாயகி தேடிச் செல்வது போன்று திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கும். இந்த படத்தை சவுந்தர்யா ரஜினிகாந்த் தயாரித்து இருந்தார். புதுமுக இயக்குநர் மதன் இயக்கியிருந்தார். ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற இந்த திரைப்படம் இன்று (மார்ச் 6ம் தேதி) நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.
ஜாக்கி
நடிகர் யுவன் கிருஷ்ணா, ரிதான் கிருஷ்ணாஸ், அம்மு அபிராமி நடிப்பில் வெளிவந்த திரைப்படம் 'ஜாக்கி'. கெடா சண்டையை மையமாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கும். இந்த திரைப்படம் ப்ரைம் மற்றும் டெண்ட் கொட்டா ஓடிடி தளத்தில் நேற்று(மார்ச் 5ம் தேதி) வெளியாகியுள்ளது.
டியர் ரதி
புதுமுக இயக்குநர் பிரவீன் கே மணி இயக்கத்தில் காதலை மையமாக வைத்து வெளியான திரைப்படம் ' டியர் ரதி'. இந்த படத்தில் நாயகனாகச் சரவண விக்ரம் நடித்துள்ளார். ஹஸ்லி அமான் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். இந்த படம் இன்று (மார்ச் 6ம் தேதி) சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.
க்ராணி
நடிகை வடிவுக்கரசி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வெளிவந்துள்ள திரைப்படம் 'க்ராணி'. புதுமுக இயக்குநர் விஜய குமரன் இயக்கியுள்ளார். சிங்கம் புலி, ஜீவி அபர்ணா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படம் சன் நெக்ஸ்ட் மற்றும் ஆஹா ஓடிடி தளத்தில் இன்று (மார்ச் 6ம்) வெளியாகவுள்ளது.
விக்ரம் ஆன் டூட்டி
மாலியக்கல், ஆசு ரெட்டி, காயத்ரி சகந்தி, ரகு, சமீர் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளிவந்துள்ள திரைப்படம் ' விக்ரம் ஆன் டூட்டி'. இந்த படம் இன்று(மார்ச் 6ம் தேதி) ஜியோ ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.
காந்தி டாக்ஸ்
புதுமுக இயக்குநர் கிஷோர் பாண்டுரங் பெலேகர் இயக்கத்தில் விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, அதிதி ராவ் உள்ளிட்டோர் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் 'காந்தி டாக்ஸ்'. வாசனம் இல்லாமல் உருவான இந்த திரைப்படம் இன்று(மார்ச் 6ம் தேதி) ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.
அன்னகாரு வஸ்தாரு
பிரபல இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கதில் கார்த்திக், கீர்த்தி ஷெட்டி உள்ளிட்டோர் நடிப்பில் தமிழில் வெளிவந்த திரைப்படம் 'வா வாத்தியார். இதன் தெலுங்கு நேரடி பதிப்பான ' அன்னகாரு வஸ்தாரு', இன்று (மார்ச் 6ம் தேதி) ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.
Om Shanti Shanti Shantihi
தெலுங்கு மொழியில் வெளிவந்த காமெடி திரைப்படம் 'Om Shanti Shanti Shantihi'. இப்படம் ஆஹா வீடியோ ஓடிடியில் நேற்று(மார்ச் 5ம் தேதி) ரிலீசாகியுள்ளது.
Charitha Kamakshi
தெலுங்கில் ரிலீசான ரொமான்டிக் திரைப்படம் 'Charitha Kamakshi'. இப்படம் நேற்று (5ம் தேதி) ஈடிவி விண் ஓடிடியில் ரிலீசாகியுள்ளது.




