10 நாட்களில் ரூ.25 கோடி வசூலைக் கடந்த ‛வித் லவ்' | மரகதநாணயம் 2 படம் தொடங்கியது | கில்லி மீண்டும் ரீ ரிலீஸ் ஆகிறது : மங்கத்தா சாதனையை முறியடிக்குமா? | இனி காமெடி படம் மட்டுமே...? இயக்குனர் பொன்ராம் முடிவு | சிவகார்த்திகேயனின் ‛சேயோன்' | பூவே உனக்காக படம் பிரசாந்த் நடிக்க வேண்டியதா? | இயக்குனர் விஜய்க்கு மறுவாழ்வு தருமா 'காதல்' | இப்ப வருமோ…எப்ப வருமோ….'ஜனநாயகன்' | இயக்குனர்கள் அடிமையாக இருக்கக் கூடாது : புது நிர்வாகிகள் பதவியேற்பு விழாவில் ஆர்கே செல்வமணி பேச்சு | பா.ஜ., தலைவரின் பேச்சுக்கு திரிஷா கண்டனம் : வருத்தம் தெரிவித்த நயினார் நாகேந்திரன் |

1988ல் வெளிவந்த படம் 'குரு சிஷ்யன்'. ரஜினிகாந்த், பிரபு, கவுதமி, சீதா, சோ ராமசாமி ஆகியோர் நடித்த இப்படத்தை எஸ்.பி.முத்துராமன் இயக்கினார். மீனா பஞ்சு அருணாசலம் தயாரித்தார். இளையராஜா இசையமைத்தார். பாண்டியன், ராதாரவி, ரவிச்சந்திரன், செந்தாமரை, வினுசக்ரவர்த்தி, மனோரமா உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.
இந்தப் படத்திற்கு ரஜினிகாந்த் 25 நாட்கள் கால்ஷீட் கொடுத்து இருந்தார். படத்தின் பாடல் காட்சிகள் மைசூரில் உள்ள பிருந்தாவன் கார்டனில் நடந்து வந்தது. ரஜினி, கவுதமி பாடிய பாடலை படமாக்கிய பிறகு இரண்டாவது நாயகனான பிரபு சீதா ஆடிய பாடல் படமாக்கப்பட்டது.
இந்த பாடல் காட்சி படமாகும் போது ரஜினிகாந்த் தனது அறையிலேயே இருக்க வேண்டிய நிலை வந்தது. அப்போது எஸ்பி முத்துராமன் "நீங்கள் வேண்டுமானால் சென்னை சென்று விட்டு வாருங்கள். அதற்குள் இந்த பாடலை முடித்து விடுகிறேன்" என்று சொன்னார். அதற்கு ரஜினி "நான் இந்த படத்திற்கு 25 நாட்கள் தான் கால்ஷீட் கொடுத்திருக்கிறேன். நீங்கள் எனது இரண்டு நாட்களை வீணாக்க வேண்டாம். யோசித்து முடிவெடுங்கள்" என்று கூறியுள்ளார்.
அதற்கு எஸ்பி முத்துராமன் "பரவாயில்லை நான் சொன்ன தேதிக்குள் படத்தை முடித்து விடுவேன் நீங்கள் போய் வாருங்கள்" என்றார்.
மறுநாள் சீதா, பிரபு ஆடிய பாடல் காட்சி படமாக்கப்பட்ட போது ரஜினிகாந்த் அங்கே வந்தார். "சம்பளம் வாங்கி விட்டு சும்மா அறையில் இருப்பதை விரும்பவில்லை. அதனால் இன்றும் நாளையும் எனக்கு ஏதாவது ஒரு வேலை கொடுங்கள் நான் செய்கிறேன்" என்று ரஜினி கூறினார்.
இதை பார்த்து ஆச்சரியமடைந்த எஸ்.பி.முத்துராமன் "உங்களுக்கு என்ன வேலை பிடிக்கிறதோ அதை செய்யலாம்" என்றார். "நான் உங்களுக்கு உதவி இயக்குனராக பணியாற்றுகிறேன்" என்று கூறிவிட்டு ரஜினி அந்த இரண்டு நாட்களும் பிரபு ஆடியோ பாடல் காட்சிக்கு உதவி இயக்குனராக பணியாற்றினார். அந்தப் பாடல் 'வா வா வஞ்சி இளமானே...'




