38 வருடங்களுக்குப் பிறகு கணவரின் டைரக்ஷனில் நடித்த நடிகை லிசி | 'சூட்சுமதர்ஷினி' தயாரிப்பாளர்களின் புதிய படம் 'தூமகேது'; கதாநாயகி நிகிலா விமல் | நடிகர் அமீர்கான் 3வது திருமணம் | பிளாஷ்பேக்: கசப்பான அனுபவங்களைத் தந்த இரண்டு திரைப்படங்களால் உதயமான ஏ வி எம் | சென்சாருக்கு இன்னும் அனுப்பவே இல்லை ; வதந்திகளை மறுத்த 'மாத்ருபூமி' படக்குழு! | முதல் பட நாயகியை வைத்து படம் தயாரிக்கும் லோகேஷ் கனகராஜ்! | மலையாள படத்தின் ரீமேக்கா? மறுத்த கீர்த்தி சுரேஷ்! | 'அவ்வை சண்முகி' படத்தினால் கமலுக்கு அடித்த ஜாக்பாட்! | தெலுங்கு இயக்குனர் உடன் கைகோர்க்கும் ஹிர்த்திக் ரோஷன்! | உடை விமர்சனத்திற்கு பதிலளித்த மாளவிகா மோகனன்! |

ராஜூ முருகன் இடத்தில் சசிகுமார் சைத்ரா நடித்த மை லார்ட் படத்தின் நன்றி அறிவிப்பு விழா சென்னையில் நடந்தது. இதில் பேசிய சசிகுமார், ‛‛இந்த படம் வெள்ளிக்கிழமை சுமாரான வசூலை பெற்றது. அடுத்து வந்த நாட்களில் வசூல் எகிறியது. இப்பொழுது 250க்கும் அதிகமான தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கிறது. அடுத்த வாரமும் இது தொடரும். இது வெற்றிப் படம். மேலும் சாட்டிலைட் ரைட்ஸ் விஜய் டிவி வாங்கியுள்ளது, டிஜிட்டல் ரைட்ஸ் விற்று உள்ளது என தயாரிப்பாளர் கூறியுள்ளார். இது எங்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. இந்த மாதிரியான படங்கள் ஓட வேண்டும் என்று பேசினார்.
உண்மையில் மை லார்ட் வெற்றி படமா என்று விசாரித்தால் இந்த படத்தின் தியேட்டர் வசூல் இன்னும் மூன்று கோடியை கூட தாண்டவில்லை. ஆனால் டிஜிட்டல், சாட்டிலைட் விற்றுள்ளதால் சில கோடி வருமானம் வந்துள்ளது. படத்தின் பட்ஜெட்டும் குறைவுதான் என்பதால் படக்குழு வெற்றி படம் என்று சொல்கிறது.
டூரிஸ்ட் பேமிலி 90 கோடியை எட்டிய நிலையில் மை லார்ட் மிக மிக குறைவான வசூலை பெற்றுள்ளது என்கிறார்கள் கோலிவுட்டில்.