ஜனநாயகன் குறித்து மகிழ்ச்சியான செய்தி | கலாபவன் மணியின் கனவை நனவாக்கிய மகள் | பேட்ரியாட் படத்தை திரையிடுவதில் கேரள திரையரங்குகள் திடீர் போர்க்கொடி | ஆக்ஷன் மோட் ஆன் : துரந்தர் 2 டிரைலர் வெளியானது | திருமணத்திற்கு ஜோடியாக வந்ததற்கு பதிலடிதான் சங்கீதாவின் புதிய மனு ? | சிரஞ்சீவி, கமல் உள்ளிட்டோருக்கு 2025ன் தெலங்கானா மாநில சினிமா விருதுகள் அறிவிப்பு | 'மேட் இன் கொரியா' இயக்குனர் மனைவியின் கதை : பிரியங்கா மோகன் | இசையில் மட்டும்தான் கவனம்: நடிப்பு தகவலுக்கு முற்றுப்புள்ளி வைத்த சாய் அபயங்கர் | ப்ளடி பாலிட்டிக்ஸ் : கொடி கம்ப அரசியல் | சந்தானம் ஜோடியான கோபிகா ரமேஷ் |

இப்போது புராணங்கள், இதிகாசங்கள், பக்தி சார்ந்த படங்களை பிரமாண்ட படங்களாக தயாரிப்பது புதிய டிரண்டாகி உள்ளது. அந்த வரிசையில் சபரிமலை ஐயப்பன் பற்றிய இரண்டு படங்கள் ஒரே நேரத்தில் தயாராகிறது.
'தத் தவம் அஸி', 'ஆர்ய கேரள வர்மன்' என்ற பெயரில் இரு படங்கள் தயாராகின்றன. 'தத் தவம் அஸி' என்றல் அதுவாகவே நீ இருக்கிறாய் என்று பொருள், இந்த படங்களை வெங்கட் பிரபு படங்களின் இணை தயாரிப்பாளராக இருந்த ஜே.கே.சரவணா தயாரிக்கிறார்.
தத் தவம் அஸி படம் சமகாலத்தில் நடக்கும் ஆன்மிகம் கலந்த ஆக்ஷன் கதையுடன் உருவாகிறது. சுவாமி ஐயப்பனின் தீவிர பக்தரின் வாழ்க்கை, நம்பிக்கை, பக்தி, ஆன்மிக பயணத்தை மையப்படுத்தி உருவாக்கப்படுகிறது. இதை 100 கோடி ரூபாய் வசூலித்த சூப்பர் ஹிட் படமான 'மாளிகப்புரம' படத்தை இயக்கிய விஷ்ணு சசி சங்கர் இயக்குகிறார்.
'ஆர்ய கேரள வர்மன்' படம், இதுவரை அதிகமாக அறியப்படாத சுவாமி ஐயப்பனின் சரிதையாக உருவாக்கப்படுகிறது. 16ம் நூற்றாண்டின் வரலாற்று பின்னணியில் அவரது வீரத்தையும், ஆன்மிக தத்துவத்தையும் மையப்படுத்தி உருவாகும் இப்படத்தை ஜே.கேசரவணா, ஆதித்யா தங்கிராலா இணைந்து இயக்குகின்றனர். இரு படங்களுக்கும் பிரேம்ஜி இசையமைக்கிறார்.




