ஜனநாயகன் குறித்து மகிழ்ச்சியான செய்தி | கலாபவன் மணியின் கனவை நனவாக்கிய மகள் | பேட்ரியாட் படத்தை திரையிடுவதில் கேரள திரையரங்குகள் திடீர் போர்க்கொடி | ஆக்ஷன் மோட் ஆன் : துரந்தர் 2 டிரைலர் வெளியானது | திருமணத்திற்கு ஜோடியாக வந்ததற்கு பதிலடிதான் சங்கீதாவின் புதிய மனு ? | சிரஞ்சீவி, கமல் உள்ளிட்டோருக்கு 2025ன் தெலங்கானா மாநில சினிமா விருதுகள் அறிவிப்பு | 'மேட் இன் கொரியா' இயக்குனர் மனைவியின் கதை : பிரியங்கா மோகன் | இசையில் மட்டும்தான் கவனம்: நடிப்பு தகவலுக்கு முற்றுப்புள்ளி வைத்த சாய் அபயங்கர் | ப்ளடி பாலிட்டிக்ஸ் : கொடி கம்ப அரசியல் | சந்தானம் ஜோடியான கோபிகா ரமேஷ் |

கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யஷ் நடித்துள்ள பான் இந்தியா படம் ‛டாக்சிக்'. நயன்தாரா, கியாரா அத்வானி, ஹூமா குரேஷி, ருக்மணி வசந்த், தாரா சுட்டாரியா, டொவினோ தாமஸ் உள்ளிட்டோர் முதன்மை வேடத்தில் நடித்துள்ளனர். கே.வி.என் நிறுவனம் தயாரித்துள்ளது. முழுக்க முழுக்க ஆக் ஷன் கதைக்களத்தில் அதிரடி படமாக உருவாகி உள்ளது.
இந்த படத்தில் இருந்து 'தபாஹி' என்ற முதல் பாடலை வருகிற மார்ச் 2ம் தேதி வெளியிடுவதாக அறிவித்துள்ளனர். இதை விஷால் மிஸ்ரா இசையமைத்து, பாடியுள்ளார். யஷ், கியாரா இருவருக்குமான காதல் பாடல் உருவாகி உள்ளது. கடற்கரையில் நடக்கும் காதல் மிக்க தருணத்தை இந்த பாடல் வெளிப்படுத்துவது போன்று போஸ்டர் உள்ளது. கன்னடம் மற்றும் ஆங்கிலத்தில் உருவாகியுள்ள இப்படம் வரும் மார்ச் 19ம் தேதி அன்று திரைக்கு வருகிறது.




