மூன்று வருடங்களுக்கு பிறகு மீண்டும் நடிப்புக்கு திரும்பிய ஐஸ்வர்யா ராய் | ஓய்வு பெற துடிக்கும் சூப்பர் ஹீரோ கதாபாத்திரத்தில் நடிக்கும் சல்மான் கான் | என்னுடன் நடிக்க மறுத்தவர்கள் இப்போது என் படத்தை புரமோட் செய்கிறார்கள் ; கென் கருணாஸ் | மேடையில் நாற்காலி கவிழ்ந்து கீழே விழுந்த நாகசைதன்யா | ஒரே நாளில் பரபரப்பை ஏற்படுத்திய விஜய் - த்ரிஷா, ரவி மோகன் - கெனிஷா | வரலட்சுமி இயக்குனராக அறிமுகமாகும் 'எஸ் சரஸ்வதி' தெலுங்கில் மட்டும் ரிலீஸ் | விஜய் தேவரகொன்டா - ராஷ்மிகா வரவேற்பு: தமிழ், கன்னடம், ஹிந்தி திரையுலகினர் 'ஆப்சென்ட்' | தான் எழுதிய 'மைல்கல்' புத்தகத்தை ரஜினியிடம் பரிசாக கொடுத்த இயக்குனர் ஞானவேல் | ஒரே காரில்... ஒரே கலரில்...: ஜோடியாக திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற விஜய், திரிஷா | சாரா அர்ஜுனின் வளர்ச்சி பெருமையாக உள்ளது! - சொல்கிறார் இயக்குனர் ஏ.எல்.விஜய் |

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும், தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவருமான விஜய், ‛ஜனநாயகன்' படத்துடன் நடிப்பதை நிறுத்திவிட்டு முழுநேரம் அரசியலில் கவனம் செலுத்தப்போவதாக ஏற்கனவே அறிவித்திருந்தார். அதன்படி, அவர் கடைசியாக நடித்த ‛ஜனநாயகன்' படம் சென்சார் சான்றிதழ் விவகாரத்தால் தாமதமாகி இன்னும் ரிலீசாகவில்லை. இதற்கிடையே தமிழக சட்டசபை தேர்தலும் நெருங்கி வருவதால், தீவிர பிரசாரத்திற்கு திட்டமிட்டு வருகிறார்.
இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு அவரிடம் இருந்து அவரது மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இது தமிழ் திரையுலகம் மட்டுமின்றி, அரசியல் வட்டாரத்திலும் பரபரப்பை கிளப்பியது. அதற்கு காரணம், விஜய், ஒரு நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவில் ஈடுபட்டு வருவதாகவும் குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார். இது தான் புயலை கிளப்பியது. நடிகையின் பெயரை சங்கீதா பொதுவெளியில் குறிப்படவில்லை என்றாலும், நடிகை திரிஷா தான் அந்த நடிகை என பலரும் கருத்து தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில், பிரபல திரைப்படத் தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் நிறுவனத்தின் உரிமையாளர்களுள் ஒருவரான கல்பாத்தி சுரேஷ் இல்ல திருமண விழா இன்று சென்னையில் நடந்தது. இந்த விழாவிற்கு நடிகர் விஜய்யும், நடிகை திரிஷாவும் ஒரே நிற உடையணிந்து, ஒரே காரில் வந்திறங்கி ஜோடியாக பங்கேற்றனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
பட்டு சட்டை, பட்டு வேஷ்டியில் விஜய்யும், அதே நிறத்திலான பட்டுப்புடவை அணிந்து திரிஷாவும் ஜோடியாக வந்து தம்பதிகளுக்கு பூங்கொத்து கொடுத்து அருகருகே நின்று போஸ் கொடுத்தனர்.
விஜய் மனைவி சங்கீதாவின் குற்றச்சாட்டு, விவாகரத்து போன்றவைகளுக்கு மத்தியில் விஜய் - திரிஷா ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்றது பேசுபொருளாகியுள்ளது. இது அரசியலில் விஜய்க்கு தாக்கத்தை ஏற்படுத்துமா, விவாகரத்து வழக்கில் சங்கீதா பக்கம் இன்னும் வலுவாகுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.




