Advertisement

சிறப்புச்செய்திகள்

ஷாருக்கானை தொடர்ந்து சல்மான்கானுக்கு ஜோடியாகும் நயன்தாரா | ஹன்சிகா - சோஹைல் விவாகரத்து: 4 ஆண்டுகளில் முடிவுக்கு வந்த திருமண வாழ்க்கை | லாபத்தில் பங்காக சம்பளம் : ராதிகா பெருமிதம் | விஜயும் யோசித்திருப்பார்.. திரிஷாவுக்கு வாழ்த்துகள்..: பார்த்திபன் 2வது வீடியோ | மேக்கப் போடுவதில் எனக்கு ஆர்வம் கிடையாது : சாரா அர்ஜுன் | நடிகை பாலியல் வழக்கு : கேரளா அரசு மேல்முறையீடுக்கு திலீப் உள்ளிட்ட நால்வருக்கு நோட்டீஸ் | நயன்தாரா, கவின் நடிக்கும் ஹாய் படத்தின் போஸ்டர் வெளியானது | என் அப்பா நினைவுக்கு வந்தார் : தாய் கிழவி வெற்றி விழாவில் கண் கலங்கிய சிவகார்த்திகேயன் | 7ஜி ரெயின்போ காலனி 2 படத்தின் படப்பிடிப்பு மீண்டும் துவங்கியது! | ரிலீஸாகி எட்டு மாதங்களுக்குப் பிறகு ஓடிடியில் வெளியாகும் சித்தாரே ஜமீன் பர் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விஜயும் யோசித்திருப்பார்.. திரிஷாவுக்கு வாழ்த்துகள்..: பார்த்திபன் 2வது வீடியோ

11 மார், 2026 - 04:40 IST
எழுத்தின் அளவு:
Vijay-would-have-thought-so-too..-Congratulations-to-Trisha..-Parthiban-2nd-video
Advertisement


நடிகர் விஜய், மனைவி சங்கீதா விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் இருக்கும் நிலையில், நடிகை திரிஷா உடன் விஜய் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றது சர்ச்சையை கிளப்பியது. சங்கீதாவின் விவாகரத்து மனுவில், ஒரு நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவில் விஜய் இருப்பதாக நடிகையின் பெயரை குறிப்பிடாமல் குற்றம் சாட்டியிருந்தார். அதற்குள் இருவரும் ஒரே காரில் ஒரே நிற உடையில் ஜோடியாக நிகழ்ச்சியில் பங்கேற்றதால் இந்த சர்ச்சை எழுந்தது.

இதற்கிடையே நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றபோது, திரிஷாவின் புகைப்படத்தை காண்பித்து கருத்து கேட்டிருந்தனர். பார்த்திபனும், திரிஷாவும் 'பொன்னியின் செல்வன்' படத்தில் இணைந்து நடித்திருந்தனர். அதில் குந்தவையாக நடித்திருந்தார் திரிஷா. இதனால், திரிஷாவின் புகைப்படத்தை பார்த்ததும், 'குந்தவையை வீட்டிலேயே குந்த வைத்தால் நல்லது' என பேசினார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவின. இதற்கு திரிஷாவும் சமூக வலைதளத்தில் கடும் கண்டனம் தெரிவித்தார். இதனையடுத்து தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்து பார்த்திபன் பதிவிட்டார்.

ஆனாலும், திடீரென தனது யுடியூப் சேனலில் ஒரு விளக்க வீடியோவையும் வெளியிட்டார். அதில், திரிஷாவின் கண்டனங்களுக்கும் பதில் சொல்லியிருந்தார். மேலும், 'திரிஷாவை பற்றி பொதுவெளியில் எக்கச்சக்கமான விமர்சனங்கள் இருக்கின்றன. அதற்கெல்லாம் அவர் பதில் சொல்லவில்லை. எனக்கு மட்டும் கண்டனத்தை தெரிவித்து இருக்கிறார். நான் வருத்தம் தெரிவித்தது ரொம்ப சின்சியராகத்தான் தெரிவித்திருந்தேன். இப்படி ஒரு ட்வீட் (திரிஷாவின் ட்வீட்) வரப்போகிறது என தெரிந்திருந்தால் நான் வருத்தம் தெரிவித்திருக்கவே மாட்டேன். அதை பார்த்த உடன் இன்றைக்கு ஒரு வீடியோவை இப்படி பண்ண வேண்டும் என்ற உத்வேகத்தை எனக்கு ஏற்படுத்தி இருக்கிறது. மூன்றாவது மனுஷியின் மூன்றாம் தரமான ட்வீட்டால்தான் இதை பேசுகிறேன்' என காட்டமாகவும் பதில் சொல்லியிருந்தார்.

அந்த வீடியோவின் தொடர்ச்சியாக அடுத்த வீடியோவை வெளியிட்டுள்ளார் பார்த்திபன். அதில் அவர் கூறியிருப்பதாவது: விஜயின் வளர்ச்சி அபாரமானது. அவருடன் காங்கிரஸ் கூட்டணி வைப்பதாக கூறி, திமுக., உடன் பேசுகின்றனர். அதற்காக காங்கிரசுக்கு 28 சீட் மற்றும் ஒரு ராஜ்யசபா சீட் கொடுப்பதாக சொல்கின்றனர். அதன்பிறகு வந்த கமெண்ட்ஸ் என்னவென்றால், திருமண வரவேற்பில் விஜய் திரிஷா பங்கேற்றதற்கு பிறகு இந்த கூட்டணி பேச்சுவார்த்தை நடந்திந்தால் காங்கிரசுக்கு 28 கூட கொடுத்திருக்க வேண்டியதில்லை என்கின்றனர்.

ஆணிற்கும் தவறில் சரிபங்கு

அப்படியென்றால், இந்த குறிப்பிட்ட ஒரு பிரச்னையால் கட்சி சரிவை நோக்கி போய்க்கொண்டிருக்கிறது. அதன்பிறகு கட்சிக்குள் நிறைய பெண்கள் வருத்தமாக இதற்கு எப்படி முட்டுக்கொடுப்பது என்றும், இதை மட்டும் தவிர்த்திருக்கலாமோ என்றும் நினைக்கின்றனர். எல்லாம் சரியாக செய்துவிட்டு, நிகழ்ச்சிக்கு வேண்டாம் நீ வீட்டிலேயே இரு என சொல்லியிருக்கலாமோ என விஜயும் யோசித்திருப்பார். அந்த ஒரு விஷயத்தை தான் நானும் வெளிப்படுத்தினேன். சரியோ தவறோ, இதில் ஆணின் தவறும் சரிபங்கு இருக்கிறது.

வொர்த் இல்லை

சினிமாவில் உயரத்தில் இருப்பவர் அதை உதறிவிட்டு அரசியலுக்கு வருவதால் இருகரம் கொடுத்து வரவேற்க வேண்டும் நான் பேசியிருந்தேன். அதற்காக நான் அக்கட்சியில் சேர்ந்ததாக கூட சொன்னார்கள். அவரது முதல் மாநாட்டில் விஜய் பேசியதை பெருமையாக கண்ணீர்விட்டு பார்த்தேன். அவரை பற்றி பேசியதற்காக தவெக.,வில் பதவிக்காக பேசியதாக சொன்னார்கள். அதற்காக நான் விஜயிடம் பதவி எதுவும் கேட்டதும் இல்லை, கேட்கப்போவதும் இல்லை. இந்த பிரச்னைகள் எல்லாம் அவ்வளவு வொர்த் இல்லை என விஜய் சொன்னதுபோல், நான் பேசிக்கொண்டிருப்பதும், என்னைப்பற்றி வந்த ட்வீட்-ம் அவ்வளவு வொர்த் இல்லை, நாம் மக்களை காப்பாற்றும் பணிக்கு போகலாம் இல்லையா..

மாற வேண்டிய கட்டாயமா

திமுக, அதிமுக.,வுக்கு மாற்றாலக விஜய் அரசியலுக்கு வந்த பிறகு, அதிமுக.,வின் முன்னாள் அமைச்சர் இங்கு வந்து சேர்ந்தபோது எனக்கு அதிர்ச்சி. அதேபோல் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு பிறகு, தவெக.,வின் சின்ன பாதிப்பை சரிசெய்ய பா.ஜ.,வின் என்டிஏ கூட்டணி உடன் சேர்வார் என்ற செய்திகளும் வருகிறது. அதிமுக, திமுக.,வுக்கு மாற்றாக வருவார் என்றும், பாஜ.,வை கொள்கை எதிரி என சொன்னது எல்லாமே மாறிடுமா என்று அதிர்ச்சி. அரசியலில் எல்லாரும் இப்படிதான் மாற வேண்டிய கட்டாயம் ஏற்படுமா? கூட்டணியே வேண்டாம் என்ற சீமானும் இங்கே இருக்கிறார்.

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான கொள்கைகள். எது எப்படியோ மக்கள் தான் சரியான தீர்ப்பை கொடுப்பார்கள். மத்தியில் யார் ஆட்சி செய்தாலும் அவர்களின் அலையன்ஸ் (கூட்டணி) ரிலையன்ஸ் உடனானது போன்றது. ஆனால் இங்கு (தமிழகத்தில்) யார் ஆட்சி செய்தாலும் தமிழுக்கு சிறு சிராய்ப்பு கூட ஏற்பட்டுவிடக்கூடாது என்பது மட்டுமே என் தனிப்பட்ட கவனம். எல்லா பிரச்னையும் ஒரு முடிவுக்கு வருவதுபோல், என் பேச்சும் முடிவுக்கு வரணும். எதற்குமே பதில் சொல்லாதவர் (திரிஷா) என் பேச்சுக்கு மட்டும் பதில் சொன்னதால்தான் நீண்ட விளக்கம் கொடுக்க வேண்டியதாகிவிட்டது.

திரிஷாவுக்கு வாழ்த்துகள்

கம்யூனிஸ்ட் தலைவர் நல்லக்கண்ணு தன் உடலை தானமாக கொடுத்தபோது, நானும் என் மனைவியும் பல ஆண்டுகளுக்கு முன்பே உடல் தானம் கொடுத்துள்ளோம் என்றேன். நடிகை திரிஷாவும் உடல் தானம் கொடுத்ததாக சொன்னார்கள். அது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. இவ்வளவு கசப்பான விஷயங்களை மீறி, இந்த விஷயத்திற்காக திரிஷாவுக்கு என் வாழ்த்துகளும் பாராட்டுகளும். நான் பேசியதில் ஏதேனும் தவறு இருந்தால் மீண்டும் மன்னிக்கவும். அதில் உள்ள சரியான விஷயங்களை மட்டும் ஏற்றுக்கொள்ளவும்.

ஒரே வீடியோவில் பேசியதை இரண்டாக பதிவிடுகிறேன், எதையும் இரண்டாக்க அல்ல. என் பக்க விளக்கத்தை சொல்வதால் பக்கவிளைவுகள் அநாகரிகமாக அரங்கேறும் என்பதை அறிந்தும் சொல்கிறேன். ஆனால் இதுப்பற்றி இனி நான் பேசப்போவதில்லை. இதோடு விட்டுவிடுவது நம் அனைவருக்குமே நல்லது. இவ்வாறு அதில் கூறியிருக்கிறார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மேக்கப் போடுவதில் எனக்கு ஆர்வம் கிடையாது : சாரா அர்ஜுன்மேக்கப் போடுவதில் எனக்கு ஆர்வம் ... லாபத்தில் பங்காக சம்பளம் : ராதிகா பெருமிதம் லாபத்தில் பங்காக சம்பளம் : ராதிகா ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap