சென்னை 60028 மூன்றாம் பாகத்திற்கு தயாராகும் வெங்கட் பிரபு | வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த அமிதாப் பச்சன் | 'கல்யாணபரிசு' முதல் 'உரிமைக்குரல்' வரை: ஸ்ரீதரின் டாப் 10 படங்கள் | முதன்முதலாக ரவி தேஜாவுக்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே | ஒரு வார சிறப்புக் காட்சி, முதலில் அனுபவிக்கும் 'ஜனநாயகன்' | இதயம் முரளி படத்தில் நடிக்க மறுத்த எஸ்.ஜே.சூர்யா | டாக்சிக் படத்தில் புகைபிடிக்கும் காட்சியில் நடித்த நயன்தாரா | இளையராஜா இசையில் உருவாகும் 'தட்டுவண்டி' | 'ஜனநாயகன்' படக்குழுவினர் படம் பார்ப்பது எங்கே? | செப்டம்பர் மாதத்தில் திரைக்கு வரும் அதர்வாவின் 'அட்ரஸ்' |

நடிகர் சிரஞ்சீவி நடிப்பில் அவர் நடிக்கும் 158வது படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்றது. இயக்குனர் பாபி கொல்லி இதை இயக்குகிறார்.. இந்த விழாவில் சிரஞ்சீவியின் தம்பியும் ஆந்திர துணை முதல்வருமான பவன் கல்யாண் மற்றும் தெலுங்கு திரையுலகின் பிரபல தயாரிப்பாளரான பந்த்லா கணேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தயாரிப்பாளர் பந்த்லா கணேஷைப் பொறுத்தவரை அவர் பவன் கல்யாணின் தீவிரமான ரசிகர் என்பதைவிட பக்தர் என்றே சொல்லலாம். பவன் கல்யாணை அவர் கடவுள் என்றே குறிப்பிடுவார். அந்த வகையில் நீண்ட நாட்களுக்குப் பிறகு இந்த நிகழ்வில் இருவரும் சந்தித்து கொண்டனர்.
இவர்கள் இருவரிடமும் சேர்ந்து சிரஞ்சீவி புகைப்படம் எடுத்துக் கொள்ள தயாரான போது, பந்த்லா கணேஷின் சீரியஸான பாவனையையும் பவன் கல்யாணின் சிரிப்பையும் பார்த்த சிரஞ்சீவி, "ஏம்ப்பா இங்கே கடவுளும் அவரோட பக்தனும் நிக்கிறீங்க, உங்க ரெண்டு பேருக்கும் நடுவுல நான் எதுக்கு அம்பிகா அகர்பத்தி மாதிரி நிக்கணும்? நான் ஓரமா போகிறேன், நீங்க ரெண்டு பேரும் நல்லா போட்டோ எடுத்துட்டு வாங்க" என்று தமாஷாக கூறினார். அதைக் கேட்டு அங்கிருந்த அனைவரும் வாய்விட்டு சிரித்தனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.




