பிளாஷ்பேக்: மூன்று திரை ஆளுமைகள் எம் ஜி ஆரோடு இணைந்து பயணித்த முதல் திரைப்படம் | 15 வருடங்கள்.. ஆயிரம் கனவுகள்...: 'டோரதி' சனந்த் நெகிழ்ச்சி | அன்பே வா, கொடி, துணிவு - ஞாயிறு திரைப்படங்கள் | லைட்டா காலரைத் தூக்கி விட்டுக் கொள்ளும் தமிழ் சினிமா ! | தமிழ் சினிமாவில் வசூலைக் குவித்த பார்ட் 2 படங்கள் | டெமாக்ரடிக் சங்கா அமைப்பிலிருந்து விலகுவதாக ரெஜினா அறிவிப்பு | கிங் 100 : தபு பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகும் சிறப்பு அப்டேட் | ரூ.634 கோடி மோசடி விவகாரத்தில் எனக்கு தொடர்பா....? : ஆதாரமில்லாமல் பேசாதீங்க - ஜனனி அசோக்குமார் | யஷ் குழந்தைகள் பெயர் பின்னால் உள்ள காரணம் | தி டார்க் ஹெவன்' கூட்டணியின் அடுத்த படம் 'தி லாஸ்ட் கேஸ்' |

பொதுவாக நாகேஷை அறிமுகப்படுத்தியவர் கே.பாலச்சந்தர் என்றும், முதல் படம் 'நீர்குமிழி' என்றே பலராலும் சொல்லப்படுகிறது. ஆனால் அது உண்மை அல்ல. நாகேஷை அறிமுகப்படுத்தியது முக்தா சீனிவாசன், படம் 'தாமரைக்குளம்'.
கே.பாலச்சந்தர், வாலி, நாகேஷ் ஆகிய மூவரும் ஒரே காலத்தில் நாடகங்களில் பணியாற்றிக் கொண்டே சினிமா வாய்ப்பு தேடியவர்கள். அந்த நேரத்தில் மயிலாப்பூரில் நடைபெற்ற நாடகமொன்றை முக்தா சீனிவாசன் பார்த்திருந்தார். அந்நாடகத்தில் நடித்த நாகேஷின் நகைச்சுவை நடிப்பு சீனிவாசனுக்குப் பிடித்திருந்தது. இதனால் அப்போது தான் இயக்கி வந்த 'தாமரைக்குளம்' படத்தில் நகைச்சுவைப் பாத்திரத்தில் நாகேஷை அறிமுகம் செய்தார்.
இந்தப் படத்தில் நடித்ததற்காக நாகேஷுக்கு ரூ.2500 ஊதியம் கொடுக்கப்பட்டது. இதுவே நாகேஷுக்கு திரைப்பட அறிமுகமாகவும் அமைந்தது. ஆனால் முதல் படத்தில் நாகேஷின் நடிப்பு கிண்டல் செய்யப்பட்டது. சர்க்கஸ் கோமாளி மாதிரி நடிப்பதாக விமர்சிக்கப்பட்டது.
கல்யாணி பிக்சர்ஸ் என்ற நிறுவனத்தின் வெளியீடான தாமரைக்குளம் படத்தை கதாசிரியர் எஸ். ஆர். நடராஜனும், ஒளிப்பதிவாளர் எஸ். ஆர். வீரபாகுவும் கூட்டாகத் தயாரித்தனர். இத்திரைப்படத்தில் சௌகார் ஜானகி, வி. கோபாலகிருஷ்ணன், எம். ஆர். ராதா ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்திருந்தனர்.




