நான்காவது முறை அறிவிப்பு : இந்த முறையாவது சரியாக வருமா 'டாக்சிக்' | பாப்கார்ன் விலை பற்றி குரல் கொடுத்த ராம் சரண் | 'டிமான்டி காலனி 3' ரிலீஸ் தேதி அறிவிப்பு | அன்பிற்கும் வெற்றிக்கும் தகுதியானவள்: சமந்தாவை வாழ்த்திய நயன்தாரா | தமிழக அரசின் திரைப்படப் பயிற்சி நிறுவனத்தின் தலைவராக ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா நியமனம் | விரைவில் எனக்கு அம்மாவாக நடிப்பாய்: ; ஹீரோயினை பயமுறுத்திய சல்மான் கான்! | சட்டசபையில் 'ஜனநாயகன்' பற்றி பெயர் குறிப்பிடாமல் பேசிய விஜய் | ஒரே நாளில் வெளியாகும் ஷங்கர் பட நாயகி மற்றும் அவரது கணவர் படம்! | 'ஸ்பிரிட்' பட டைட்டிலால் பாதிக்கப்பட்ட விவசாய குடும்பம் ; பிரபாஸிடம் கோரிக்கை! | விக்ரம் வழியில் விஜய் ஆண்டனி |

வினோத் இயக்கத்தில் முதல்வர் விஜய் நடிப்பில் உருவாகி உள்ள கடைசி படம் ஜனநாயகன். கடந்த பொங்கல் தினத்தில் வெளியாக இருந்தது. ஆனால் சென்சார் சான்றிதழில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டது. தற்போது விஜயும் முதல்வராக உள்ளார். விரைவில் தணிக்கை சான்றிதழ் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜூன் மாதம் இரண்டாவது அல்லது மூன்றாவது வாரத்தில் படம் திரைக்கு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. என்றாலும் இன்னும் அதிகாரப்பூர்வ தகவல் வெளியிடப்படவில்லை. இப்படியான நிலையில், இப்படத்தின் இயக்குனர் வினோத்திடம் ‛ஜனநாயகன்' படம் எப்போது திரைக்கு வருகிறது என்ற கேள்வி எழுந்தது. அதற்கு அவர், வரும் போது வரும். அதை என்னால் இப்போது உறுதியாக சொல்ல முடியாது. அதற்கான வேலை நடக்கிறது'' என்றார்.




