நினைக்காத நாளில்லையே... : கண்ணதாசன், எம்எஸ் விஸ்வநாதனுக்கு இளையராஜா புகழாரம் | 'ஐட்டம் சாங்' என சொல்லாதீர்கள் : தமன்னா காட்டம் | 'வாரணாசி' பிரேக்: குடும்பத்துடன் பிரான்ஸ் சென்ற மகேஷ் பாபு! | ரஜினியும், நானும் விமானத்தில் பயணித்தபோது போட்ட ஒப்பந்தம்! : கமல் பேச்சு | விஜய் தேவரகொண்டாவுடன் மோதும் கார்த்தி! | புதிய ஹேர் ஸ்டைல் வீடியோவை வெளியிட்ட பூஜா ஹெக்டே! | தியேட்டர் அனுபவத்திற்கு ஏற்ற படம் ‛நாகபந்தம்' | பிளாஷ்பேக்: அண்ணாதுரை திரைக்கதை வசனகர்த்தாவாக, என் எஸ் கிருஷ்ணன் நாயகனாக அறிமுகமான “நல்ல தம்பி” | ஒன்றாக இணைந்து ரசிகர்களை சந்தித்த ரன்பீர் கபூர், யஷ் | முதல்வர் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிவிட்டேன் : சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த ரஜினிகாந்த் |

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி நடித்த 'டிமான்டி காலனி' முதல் பாகம் 2015ம் ஆண்டிலும், இரண்டாம் பாகம் 2024ம் ஆண்டிலும் வெளியானது. இரண்டு பாகங்களும் கமர்ஷியலாக வெற்றிபெற்று நல்ல லாபத்தை பெற்றுகொடுத்தது. 2 கோடியில் தயாரிக்கப்பட்ட முதல் பாகம் 25 கோடிக்கு மேல் வசூலித்தது. 25 கோடியில் தயாரிக்கப்பட்ட 2வது பாகம் 80 கோடிக்கு மேல் வசூலித்தது. இதனால் 'டிமான்டி காலனி' 3ம் பாகம் உருவானது. இதில் அருள்நிதி, பிரியா பவானி சங்கர் உட்பட பலர் நடித்தனர். சில மாதங்களாக இந்த படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போனது.
இந்நிலையில் செப்டம்பர் 11ல் படம் ரிலீஸ் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்தது. டிமான்டி காலனி 2ம் பாகத்தில் ஹீரோவை விட, ஹீரோயினுக்கு முக்கியத்துவம் இருந்தது. இந்த பாகத்தில் கதை வேறு மாதிரி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. டிமான்டி காலனி 2வது பாகத்துக்கு பின் தமிழில் பிரியா பவானி சங்கருக்கு வெற்றிகள் இல்லை. அவர் தெலுங்கு பக்கம் போய்விட்டார். பாகம் 3 வெற்றி பெற்றால், அவர் மீண்டும் தமிழில் கவனம் செலுத்த வாய்ப்புள்ளது.