Advertisement

சிறப்புச்செய்திகள்

முதல்வர் விஜய் பிறந்தநாள், அவருடன் கேக் வெட்டி கொண்டாடிய திரிஷா | துபாயில் செட்டில் ஆனது ஏன் : யுவன் சங்கர் ராஜா விளக்கம் | மம்முட்டிக்கு பத்மபூஷண், மாதவனுக்கு பத்ம ஸ்ரீ : ஜனாதிபதி வழங்கினார் | 60 ஆண்டு அரசியலை விஜயும் செய்ய வேண்டாம்! எஸ்.ஏ.சி அறிவுரை | பாலகிருஷ்ணா படத்தில் இதுவரை நடித்திராத கதாபாத்திரத்தில் காஜல் அகர்வால்! | 4 நாட்களில் 50 கோடி வசூலை கடந்த சமந்தாவின் 'மா இண்டி பங்காரம்' | விஜயை அன்பாலோ செய்தாரா திரிஷா? | ஜனாதிபதி முர்முவின் ஆவணப் படத்தை தயாரிக்கிறார் அமீர்கான் | முதன் முதலாக சினிமாவில் நடனமாடிய அன்னா பென் | பிளாஷ்பேக் : 3 படத்தில் ஒரே கேரக்டரில் நடித்த ரேவதி |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

துபாயில் செட்டில் ஆனது ஏன் : யுவன் சங்கர் ராஜா விளக்கம்

23 ஜூன், 2026 - 07:00 IST
எழுத்தின் அளவு:
Why-did-he-settle-in-Dubai-Yuvan-Shankar-Raja-explains
Advertisement

ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரிப்பில் புதுமுக இயக்குனர் சித்தார்த் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடிக்கும் பட அறிவிப்பு சென்னையில் நடந்தது. இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

விக்ரம் பிரபு கூறியதாவது : "இயக்குனர் சித்தார்த் என்னிடம் முதன்முதலில் கதை கூறும்போது, வெறும் காட்சி விவரிப்பாக இல்லாமல், ஆடியோவுடன் கூடிய ஒரு புதிய எக்ஸ்பீரியன்ஸாக கதையை கூறினார் . தியேட்டரில் அமர்ந்து படம் பார்ப்பது போன்ற ஒரு உணர்வை அந்த நரேஷன் தந்தது. இயக்குனர் இந்த திரைக்கதைக்காக இரண்டு ஆண்டுகள் உழைத்துள்ளார். தியேட்டர் எக்ஸ்பீரியன்ஸிற்கு முக்கியத்துவம் வாய்ந்த இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார் என்று தெரிந்ததும் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். ஒரே பாணி படங்களில் தேங்கி நிற்காமல், தொடர்ந்து புதிய விஷயங்களை ஆராய விரும்புகிறேன். புதுமுக இயக்குனர்கள் புதிய சிந்தனைகளுடன் என்னை அணுகும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது" என்றார்.

இயக்குனர் சித்தார்த் பேசுகையில், "விக்ரம் பிரபு மற்றும் யுவன் சாருடன் இணைவது மிகுந்த உற்சாகத்தை அளிக்கிறது . மனித உணர்வுகளை மையமாகக் கொண்ட, அதே நேரத்தில் முற்றிலும் வணிக ரீதியிலான ஒரு புதுமையான கதையாக இது இருக்கும். ஒரு குறிப்பிட்ட லேண்ட்ஸ்கேப் மற்றும் அங்குள்ள மனிதர்களைப் பற்றிய உலகத்தை இதில் உருவாக்கியுள்ளோம். இதுவரை பார்த்திராத முற்றிலும் மாறுபட்ட ஒரு புதிய பரிமாணத்தில் விக்ரம் பிரபுவை இப்படத்தில் பார்க்கலாம்" என்றார்.

யுவன் சங்கர் ராஜா பேசுகையில், "இத்திரைப்படம் மியூசிக்கலாகவும், முற்றிலும் மாறுபட்ட கமர்சியல் பாணியிலும், ஒரு புதுமையான விஷுவல் லாங்குவேஜ் உடனும் அமையவுள்ளது. இதில் முற்றிலும் ஒரு புதிய மியூசிக் ஜானரை கொண்டு வர முயற்சித்து வருகிறோம். துபாயில் வசித்தாலும் நான் பெரும்பாலும் சென்னையில் தான் இருக்கிறேன். என் மகள் துபாயில் படித்து வருவதால் அங்கு இருக்கிறேன். பணிகளுக்கு ஏற்ப அங்கும், இங்கும் டிராவல் செய்கிறேன். இந்த படத்தில் நான் பாடவில்லை, பாடினால் நன்றாக இருக்கும்" என்றார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மம்முட்டிக்கு பத்மபூஷண், மாதவனுக்கு பத்ம ஸ்ரீ : ஜனாதிபதி வழங்கினார்மம்முட்டிக்கு பத்மபூஷண், மாதவனுக்கு ... முதல்வர் விஜய் பிறந்தநாள், அவருடன் கேக் வெட்டி கொண்டாடிய திரிஷா முதல்வர் விஜய் பிறந்தநாள், அவருடன் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film
    • நடிகர் : ஏ.கிருஷ்ணா
    • நடிகை : ஆராத்யா
    • இயக்குனர் :M.B.ராஜதுரை
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap