சுவாஸ்யமான சூப்பர் தகவல்கள்: தனுஷ் பிறந்தநாள் ஸ்பெஷல் | ஜனநாயகன் படத்திற்கு எதிராக வழக்கு : பதிலளிக்கும்படி தணிக்கை வாரியத்திற்கு உத்தரவு | சினிமா மாறிவிட்டது இப்ப கட்டிங் இல்லை : சங்க நிர்வாகிகள் புகழாரம் | மும்பை பாந்த்ராவில் பூஜா ஹெக்டே கட்டிய பிரமாண்ட வீடு! | ஜூனியர் என்.டி.ஆருக்கு தோள்பட்டையில் காயம்! 'டிராகன்' படப்பிடிப்பு நிறுத்தம்! | கே.ஜி.எப் நாயகனுடன் இணைந்து நடிக்க ஆர்வத்தில் இருக்கும் ரன்பீர் கபூர்! | 'பாலிமேரா-3' படத்தில் நெகட்டிவ் ரோலில் அர்ஜுன்! | இசை என்பது தெய்வீக கலை, வாழ்வே ஆன்மிகம் : இளையராஜா பேச்சு | 'ஏ' சான்றிதழ் காரணமாக சென்னையில் 'ஜனநாயகன்' படக் காட்சிகள் நிறுத்தம்? | கனவாக தொடங்கியது : ஆதி |

தமிழில் தகராறு, வீர சிவாஜி, தேன் உள்ளிட்ட சில படங்களை இயக்கியவர் கணேஷ் விநாயகன். இவர் புதிதாக இயக்கி உள்ள படம் ‛அருள்வான்'. அருள்நிதி, ஆரவ், ரம்யா பாண்டியன், காளி வெங்கட், கிருத்திகா ஆகியோர் முதன்மை வேடத்தில் நடித்துள்ளனர். ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார்.
இந்த படத்தை 90 பிக்சர்ஸ் எனும் நிறுவனம் தயாரிக்கின்றனர் . கடந்த சில மாதங்களாக நடந்து வந்த இதன் படப்பிடிப்பு முடிந்து மற்ற பணிகள் நடந்து வந்தன. இப்போது ஜூலை 17ம் தேதியன்று திரைக்கு வருகிறது என அறிவித்துள்ளனர். கிராமிய பின்னணியில் பீல் குட் படமாக தயாராகி உள்ளது.
அருள்நிதி நடிப்பில் இதற்கு முன் ‛ராம்போ' என்ற படம் நேரடியாக ஓடிடியில் வெளியானது. அடுத்து இவரது நடிப்பில் உருவாகி உள்ள ‛டிமான்டி காலனி 3' படம் செப்டம்பர் மாதம் திரைக்கு வரும் சூழலில் அதற்கு முன்னதாகவே ‛அருள்வான்' படம் ரிலீஸாக உள்ளது.




