Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

துல்கரிடம் நான்கு மணி நேரம் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை

03 ஜூலை, 2026 - 10:47 IST
எழுத்தின் அளவு:
Customs-officials-interrogate-Dulquer-for-four-hours
Advertisement

பூட்டானில் இருந்து விலை உயர்ந்த கார்களை இறக்குமதி செய்து வரி ஏய்ப்பு செய்ததாகக் கூறி, கடந்த வருடம் கேரளாவில் சுங்கத்துறை அதிகாரிகள் 'ஆப்பரேஷன் நும்கோர்' என்கிற பெயரில் சோதனை நடத்தியதில், நடிகர் துல்கர் சல்மானின் இரண்டு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அதேசமயம், தான் சட்டபூர்வமான வழிகளிலேயே இந்த வாகனங்களை வாங்கியதாகவும், அவை பூட்டானிலிருந்து கடத்தப்பட்டவை என்பது தங்களுக்குத் தெரியாது என்றும் துல்கர் சல்மான் விளக்கமளித்தார். அது தொடர்பான ஆவணங்களையும் அவர் ஏற்கனவே சமர்ப்பித்து இருந்தார்.

இந்த நிலையில், நேற்று கொச்சியில் உள்ள சுங்கத்துறை அலுவலகத்தில் மீண்டும் துல்கர் சல்மானிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். கிட்டத்தட்ட நான்கு மணி நேரத்திற்கு மேலாக இந்த விசாரணை நடத்தப்பட்டது. அப்போது அவரிடம் கார்களை வாங்கிய விதம், பரிவர்த்தனைகள் மற்றும் ஆவணங்கள் குறித்தும் கேள்விகள் கேட்கப்பட்டன. மேலும், இந்த விசாரணை தொடர்ந்து நடைபெறுவதால் தேவைப்பட்டால் அவர் மீண்டும் விசாரணைக்கு அழைக்கப்படலாம் என்றும் சுங்கத்துறை வட்டாரத்தில் சொல்லப்படுகிறது.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
எம்எல்ஏ விடுதியில் குடியேறிய பாவா லட்சுமணன்: உதவிக்கரம் நீட்டிய அமைச்சர் ராஜ்மோகன்எம்எல்ஏ விடுதியில் குடியேறிய பாவா ... சாந்தனுவின் 'பல்டி' திடீர் ஓடிடி ரிலீஸ் : பாக்யராஜ் மறைவின் அனுதாப அலை  காரணமா? சாந்தனுவின் 'பல்டி' திடீர் ஓடிடி ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

சம்சூ காதர் பேட்டை துல்கர் நடித்த லக்கீ பாஸ்கர் படத்தில் இதே போன்று luxury car கடத்தும் காட்சி உள்ளதே
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film
    • நடிகர் : ஏ.கிருஷ்ணா
    • நடிகை : ஆராத்யா
    • இயக்குனர் :M.B.ராஜதுரை
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap