தனுஷ் - வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகும் 'தமிழ் முருகன்' | நீச்சல் உடையில் நடிக்க உடன்பாடு இல்லை : காஜல் அகர்வால் | ஓடிடியில் வெளியானது பெத்தி : விமர்சனமான ஜான்வி கபூரின் காட்சிகள் நீக்கம் | சிறுமி படத்தை தவறாக வெளியிட்ட விநாயகன் மீது புகார் | நிறம்: ஹைப்பர் லிங்க் ஆந்தாலஜி படம் | ஆயிரம் கோடி நஷ்டத்தை சந்தித்த சூப்பர் ஹீரோயின்ஸ் படம் | பிளாஷ்பேக்: அதிகம் அறியப்படாத சிவாஜி குடும்ப வாரிசு | பிளாஷ்பேக்: கடைசி படத்தில் பாகவதர் செய்த யுக்திகள் | நீருக்கடியில் சண்டைக் காட்சியில் நடித்து அசத்திய ராஷ்மிகா | டாக்சிக் படத்தில் நயன்தாராவிற்கு 12 கோடி சம்பளமா? |

நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் தயாரிக்க, ரஜினிகாந்த் நடிக்கும் தர்மன் படத்தில் நடிக்கிறார் சிம்ரன். பேட்ட படத்தில் ரஜினியுடன் நடித்து இருந்தாலும், இதில் தான் ஜோடியாக வருகிறார். இது குறித்து அவர் கூறுகையில், ‛‛சில கனவுகள் நனவாக சரியான நேரம் அமைய வேண்டும். ரஜினிகாந்த்துடன் இணைந்து முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பது என் நீண்ட நாள் கனவுகளில் ஒன்று. அது 'பேட்ட' திரைப்படத்தில் நிறைவேறியது. என்னுடையது சிறிய கதாபாத்திரமாக இருந்தாலும் மறக்க முடியாத அனுபவமாக இருந்தது.
ஆனால், இன்று 'தர்மன்' படத்தில் முக்கியத்துவமும் நிறைந்த ஒரு கதாபாத்திரத்தில் அவருடன் மீண்டும் இணைந்து நடிப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இந்த வாய்ப்பை வழங்கிய ரஜினிகாந்த் , கமல்ஹாசன், இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து, ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி 'என்ற தெரிவித்துள்ளார்.
1997ல் வெளியான ஒன்ஸ்மோர் படத்தின் மூலம் ஹீரோயின் ஆன சிம்ரன், 30 ஆண்டுகளுக்கு பின் தர்மன் படத்திலும் ஹீரோயினாக நடிப்பது குறிப்பிடத்தக்கத்து. சிம்ரன் காலத்தில் வந்த நடிகர்கள் பலர் குடும்பம், வெளிநாடு என செட்டில் ஆகிவிட்ட நிலையில் இவர் மட்டுமே கதை நாயகியாக நடித்து வருகிறார். கடந்த ஆண்டு வந்த டூரிஸ்ட் பேமிலி படத்திலும் சிம்ரன் ஹீரோயினாக நடித்து இருந்தார்.




