ரன்வீர் சிங் பற்றிய ரகசியத்தை உடைத்த பூஜா ஹெக்டே | ''தளபதி வந்தா தள்ளிப்போய் தானே ஆகணும்...'': 'இம்மார்டல்' ரிலீஸை தள்ளி வைத்த ஜி.வி.பிரகாஷ் | பிளாஷ்பேக்: எம் ஜி ஆர், கருணாநிதி கலையுலகப் புகழுக்கு சான்றளித்த இரு படங்கள் | சாய் பல்லவியின் ஏக் தின் வெளிநாடுகளில் மட்டும் ஓடிடியில் வெளியாகிறது | ஜூலை 18ல் மண்டாடி படத்தின் ப்ரோமோ பாடல் : ஸ்டைலிஷ் லுக்கில் வெளியான சூரி போஸ்டர் | 171வது படத்தில் நாயகனாக நடிக்கும் சரத்குமார் | 'கட்டா குஸ்தி 2'வை பாராட்டிய ரஜினி | பிளாஷ்பேக்: வாசு பெயருக்கு முன்னால் 'அல்வா' வந்தது எப்படி? | 6 மாதங்களுக்கு பின்பு வெளியாகும் முதல்வர் விஜயின் 'ஜனநாயகன்': ஜூலை 23ல் ரிலீஸ் | காமராஜ் படத்தை நாட்டுடமை ஆக்குங்கள் : முதல்வருக்கு வேண்டுகோள் |

மற்றவர்களை சிரிக்க வைக்கும் காமெடி நடிகர்களின் வாழ்க்கை சோகமானதாக இருக்கும் என்று பொதுவாக சொல்லப்படுவதுண்டு. அதற்கு அல்வா வாசு விதிவிலக்கல்ல. வடிவேலுவின் காமெடி கூட்டணியில் நிறைய காலம் பயணித்தவர் வாசு. அவரும், வடிவேலும் இணைந்து நடித்த காமெடி காட்சிகள் இன்றும் பிரபலமானவை.
ஆனால் வாசு சினிமாவிற்கு வந்தது நடிப்பதற்காக அல்ல இசை அமைப்பதற்காக. சொந்த ஊர் மது ரை. ஏழ்மையான குடும்பம். இசை ஆர்வம் மிக்க வாசு கிடார் மீது ஆசைகொண்டு கிடார் வாசிக்கப் பயின்றார். மதுரை அமெரிக்கன் கல்லூரில் எம்.காம் படிக்கும்போது 'மியூசிக்' என்றால் வாசுதான் என கல்லூரி அடையாளம் காட்டியது.
“உனக்கு மியூஸிக் நல்லா வருது... சென்னைக்குப் போனா பெரிய இசையமைப்பாளர் ஆகிடலாம்.” என நண்பர்கள் உசுப்பேற்றி விட்டார்கள். வாசுவின் மனதிலும் அதே எண்ணம்தான். கல்லூரியில் எம்.காம் படிப்பை முறையாகப் படித்து முடித்து பட்டம் பெற்றார். இசையமைப்பாளர் கனவுகளைச் சுமந்தபடி சென்னைக்கு பஸ் ஏறினார்.
கையில் கிடாருடன் இசை வாய்ப்பு தேடி அலைந்தார். கடைசியாக கிதாரை தூக்கி போட்டுவிட்டு மணிவண்ணனிடம் உதவியாளராகச் சேர்ந்தார். 'வண்டிச்சக்கரம்' படத்தில் ஒரு சீன் மட்டும் நடிக்க வாய்ப்பு கிடைக்க, முதல்முறையாக வெள்ளித்திரையில் தலையைக் காட்டினார் வாசு.
அடுத்து 'அமைதிப்படை' படத்தில் உதவி இயக்குநராக இருந்து அதில் நடிக்கவும் செய்தார். அதில் ஹீரோ சத்யராஜுக்கு அல்வா வாங்கிக் கொடுப்பது போன்ற ஒரு காட்சி இருக்கும். அந்தக் காட்சி பிரபலமாகவே அவரது பெயருடன் அல்வா ஒட்டிக் கொண்டது. பின்னர் 'அல்வா' வாசு என்றே அழைக்கப்பட்டார்.
வடிவேலுவின் நட்பு கிடைத்தது. பல படங்களில் அவரின் கூட்டாளிகளில் ஒருவராக நடித்தார். 900 படங்களுக்குமேல் சிறு சிறு வேடங்களில் நடித்தார். ஒரு கட்டத்தில் வாய்ப்புகள் நின்று விடவே மதுரைக்கே திரும்பிச் சென்றார். சிறுநீரக பிரச்னை காரணமாக தனது 57வது வயதில் காலமானார்.