30 நாட்களில் மூன்று படங்கள் ரிலீஸ் ; மமிதா பைஜூ சாதனை! | வரிசையில் நிற்காமல் சிறப்பு தரிசனம் செய்த ‛காந்தாரா' நடிகைக்கு பக்தர்கள் கண்டனம் | பிளாஷ்பேக்: எம் ஜி ராமச்சந்திரன் என பெயரிட்டு வெளிவந்த முதல் எம் ஜி ஆர் திரைப்படம் “அந்தமான் கைதி” | பிளாஷ்பேக்: நடிகைகள் லலிதா, பத்மினியை நினைவில் வைத்து உருவாக்கப்பட்ட “காஞ்சனா” | 11 வருடங்களுக்கு பின் தாயான பத்மப்ரியா ; முதல் பிறந்தநாளில் குழந்தையை அறிமுகப்படுத்தினார் | அதிக வியாபாரத்தில் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' | சீக்கிரம் 'இந்தியன்' ஆக மாறுவேன் : அகில் நாகார்ஜூனா | ஜனநாயகன் - இன்றுடன் 200 கோடி வசூலைக் கடக்குமா? | முதல்வர் விஜய்யை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த நடிகர் ஜெய் | மூன்றாவது முறையாக ஜோடி சேரும் தினேஷ், கயல் ஆனந்தி! |

பிரதீப் ரங்கநாதனிடம் பணியாற்றியவர் டி.ஐ.கபில். தற்போது அவர் 'லவ் புராஜக்ட்' என்ற படத்தை இயக்கி, நடித்துள்ளார். கதாநாயகியாக சங்கீதா நடித்துள்ளார். மற்றும் சக்திவேல், குண்டு சத்யா, வினோத் விஜய் சேனாதிபதி ஆகியோர் நடித்துள்ளனர். சாதிக் கபீர் ஒளிப்பதிவு செய்துள்ளார், சிமியோன் டெல்பர் இசை அமைத்துள்ளார்.
படம் பற்றி இயக்குனர் இயக்குநர் கபில் கூறும்போது “இன்றைய இளைஞர்களின் காதல், உறவுகள் மற்றும் உணர்வுகளை மையமாகக் கொண்டு உருவாகும் படம். புதிய திரைக்கதை, வித்தியாசமான காட்சியமைப்பு மற்றும் தரமான தொழில்நுட்பத்தில் உருவாக்கி வருகிறோம். காதலை ஒரு புதிய பார்வையில் ரசிகர்களுக்கு வழங்குவதே எங்கள் நோக்கம். இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது” என்றார்.




