25 வருடங்களுக்குப் பிறகு தமிழ் சினிமாவில் ரவீனா டாண்டன் | ‛மண்டாடி' : 'உசுரே நீதான் புள்ள' பாடல் வெளியீடு | நாகார்ஜூனாவிற்குள் இருக்கும் போன் ஹேக் பயம் | வரிசை கட்டும் யுவன்ஷங்கர் ராஜாவின் படங்கள்…. | ரூ.100 கோடி வசூலைத் தொடுமா 'டிசி' | விஸ்வநாத் அண்ட் சன்ஸ் : முதல் நாள் வசூல் எவ்வளவு ? | வில்லனாக அறிமுகமாகி ஹீரோவாக உச்சம் தொட்ட நடிகர்கள் | நான் நடித்த காட்சி வரல... : சூர்யாவை வறுத்தெடுத்த மன்சூர்அலிகான் | ‛பாண்டியன் இனி என் நண்பர்' : வழி தெரியாமல் தவித்த மம்மூட்டிக்கு உதவிய தமிழர் | சுதந்திர தின விழாவில் நடிகை த்ரிஷா பங்கேற்பு |

தெலுங்கு, கன்னடத்தில் பிசியாக நடித்துக் கொண்டிருந்த ஸ்ரீலீலா, 'பராசக்தி' படத்தின் மூலம் தமிழுக்கு வந்தார், தற்போது தனுஷ் நடிக்கும் 'ஓம்' படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இதுதவிர அனுராக் காஷ்யப் படம் மூலம் இந்திக்கும் செல்கிறார்.
இந்த நிலையில் ஸ்ரீலீலா புதிய படங்களில் ஒப்பந்தமாவதை தவிர்த்து வருகிறார். அஜித் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் படத்தில் ஸ்ரீலீலாதான் ஹீரோயினாக நடிக்க இருந்தார். அவர் கால்ஷீட் தருவதில் பிரச்னை இருப்பதாக சொன்னதால், இப்போது கயாடு லோஹர் நடிக்கிறார். சமீபத்தில் வெளியான 'லெனின்' படத்தில் நடிக்க ஸ்ரீலீலாதான் முதலில் தேர்வானார். ஆனால் அவர் விலகிக் கொள்ளவே பாக்யஸ்ரீ போர்ஸ் நடித்தார்.
விஜய் தேவரகொண்டா நடிக்கும் 'கிங்டம்' தெலுங்கிலேயே மற்றொரு படமான 'அனகனக ஒக்க ராஜுக்' ஆகிய படங்களிலும் ஸ்ரீலீலா நடிக்க மறுத்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது. டாக்டர் படிப்பை (எம்பிபிஎஸ்) முடித்திருக்கும் ஸ்ரீலீலா, இன்டென்ஷிப் செல்கிறாராம். அடுத்த எம்டி படிப்பிற்காக நீட் தேர்வுக்கும் தயாராகி வருகிறாராம். இதனாலேயே அவர் புது படங்கள் எதிலும் நடிக்காமல் இருப்பதாக கூறப்படுகிறது. ஸ்ரீலீலாவின் குடும்பத்தில் அனைவருமே படித்து நல்ல வேலையில் இருப்பவர்கள். அதேபோல ஸ்ரீலீலாவும் டாக்டர் படிப்பை முடித்து விட்டு நடிக்கலாம் என்று குடும்பத்தினர் கூறிவிட்டதாகவும் கூறப்படுகிறது.




