கன்னட நடிகர் ஆனந்த் நாக்கிற்கு தாதா சாகேப் பால்கே விருது அறிவிப்பு | 'கிங்' படம் கிறிஸ்துமஸ்க்கு வெளியாவது உறுதி: ஷாருக்கான் அதிகாரப்பூர்வமாக தகவல் | படத்தைப் பார்த்து பயந்து ஓடிய மக்கள் : வரலாற்றில் இடம்பிடித்த 3 ஹாரர் படங்கள் | 'துரந்தர்' படத்தின் வசூல் சாதனையை முறியடித்த 'ஹனுமான் அன்ஷ்' | 90ஸ் Vs லேட்டஸ்ட் : ஹீரோக்களின் ஓப்பனிங் பாடல்... ரசிகர்களை கவர்வதில் எது பெஸ்ட்? | சல்மான்கானின் 'மாத்ருபூமி' விரைவில் திரைக்கு வருகிறதா? | வெங்கடேஷ் படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கும் நிவேதா பெத்துராஜ், டிம்பிள் ஹயாதி! | டி.ராஜேந்தரின் இசையில் முதல் முறையாக பாடிய இளையராஜா | திரிஷாவுக்கு நடிகை அம்பிகா கொடுத்த அட்வைஸ்! | ஆணவக் கொலைக்கு கடும் தண்டனை வேண்டும் : அனு மோல் |

தெலுங்கு சினிமாவின் மூத்த மற்றும் முன்னணி நடிகர் நாகார்ஜூனா. தற்போது தனது 100வது படத்தில் நடிக்கிறார். ஐதராபாத்தில் தெலுங்கானா சைபர் பாதுகாப்பு தொடர்பான நிகழ்ச்சி ஒன்று நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக இவர் பங்கேற்று பேசினார்.
நாகார்ஜூனா கூறுகையில், ‛‛என் செல்போனை ஹேக் செய்து விடுவார்களோ என்ற பயம் எனக்கு எப்போதும் உண்டு. அதனால் 15 நாட்களுக்குள் ஒருமுறை எனது பாஸ்வேர்டை மாற்றிக் கொண்டே இருப்பேன். இதேப்போல் வீட்டில் உள்ள வைபை பாஸ்வேர்டையும் மாற்றுவேன். காரணம் இதையும் ஹேக் செய்வார்கள் என்ற பயம் உள்ளது. எனது செல்போனில் எந்த போட்டோவும் எடுப்பதில்லை. ஒரு பிரபலமாக இருப்பதால் எல்லாவற்றிலும் கவனமாக இருக்க வேண்டியிருக்கிறது.
நான்கைந்து ஆண்டுகளுக்கு முன் வங்கி அதிகாரி பேசுவதாக என்னை அழைத்தார். பங்கு முதலீடு பற்றி பேசினார். வழக்கமாக, என் வங்கியின் தொடர்பு மேலாளர்தான் அழைப்பார், ஆனால் இது வேறு விதமான அழைப்பாக வந்தது. அதேசமயம் அவர் முதலீட்டை சந்தைப்படுத்துவதில் குறியாக இருந்தார். நான் இறுதிவரை சம்மதிக்கவில்லை. சுங்கத்துறையில் இருந்து பேசுவது போல் எல்லாம் எனக்கு அழைப்பு வந்தது. அதிர்ஷ்டவசமாக என் உறவினர் சைபர் குற்றப்பிரிவை அழைத்தார். இதுபோன்ற அழைப்புகளில் எப்போதும் எச்சரிக்கை உடன் இருக்க வேண்டும்'' என்றார்.




