இருமுடி படத்தை பெரிய அளவில் எதிர்பார்க்கும் பிரியா பவானி சங்கர் | சைப் அலிகான் ஒரு முதிர்ச்சியடைந்த குழந்தை : பிரியதர்ஷன் | ஸ்பிரிட் படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு : தீவிர உடற்பயிற்சியில் இறங்கும் பிரபாஸ் | 'ராம் இன் லீலா' படத் தலைப்புக்குத் தணிக்கை சிக்கல் ? | 25 வருடங்களுக்குப் பிறகு தமிழ் சினிமாவில் ரவீனா டாண்டன் | ‛மண்டாடி' : 'உசுரே நீதான் புள்ள' பாடல் வெளியீடு | நாகார்ஜூனாவிற்குள் இருக்கும் போன் ஹேக் பயம் | வரிசை கட்டும் யுவன்ஷங்கர் ராஜாவின் படங்கள்…. | ரூ.100 கோடி வசூலைத் தொடுமா 'டிசி' | விஸ்வநாத் அண்ட் சன்ஸ் : முதல் நாள் வசூல் எவ்வளவு ? |

முதல்வர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய், தந்தையை போல் நடிப்புக்கு வராமல் தாத்தா எஸ்ஏ சந்திரசேகர் போன்று இயக்குனராகி உள்ளார். அவரது இயக்கத்தில் முதல் படமாக ‛சிக்மா' உருவாகி உள்ளது. சந்தீப் கிஷன், பரியா அப்துல்லா முதன்மை வேடத்தில் நடித்துள்ளனர். லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படம் ஜூலை 31ம் தேதியே வெளியாக வேண்டியது. ஆனால் ஜேசனின் தந்தை, விஜயின் கடைசி படமான ‛ஜனநாயகன்' ஜூலை 23ல் வந்ததால் பல படங்கள் வெளியீட்டை தள்ளி வைத்தன. அதில் இவரது படமும் தள்ளிப்போனது. விரைவில் புதிய ரிலீஸ் தேதியை அறிவிக்க உள்ளனர்.
இந்நிலையில் படத்தின் புரொமோஷன் நிகழ்வு துவங்கி உள்ளது. ஜேசன் அளித்த பேட்டியில் நடிக்காமல் இயக்கம் தேர்வு செய்தது ஏன் என்பது குறித்து அவர் கூறியதாவது, ‛‛சின்ன வயதில் இருந்தே எனக்கு ஒரு பழக்கம் உள்ளது. கதை சொல்வது ரொம்ப பிடிக்கும். அது படக் கதையாக கூட இருக்க வேண்டியதில்லை. அது நண்பர்களுடன் பேசுவதாக கூட இருக்கலாம். எனக்கு எழுதும் பழக்கமும் உள்ளது. எனக்கு தோணும் விஷயங்களை எழுதியோ, டைப் செய்தோ வைத்துக் கொள்வேன். இந்த பழக்கத்திற்கு பிறகு தான் எழுவதில் ஆர்வம் ஏற்பட்டது. இதை முறையாக செய்யலாம் என டொரோண்டோவில் ஒரு பிலிம் ஸ்கூலில் அதற்கான படிப்பை படித்தேன். பிலிம் மேக்கிங் உடன் அது தொடர்புடைய எல்லா துறைகளையும் சேர்த்து இருந்தது. அப்போது தான் நான் எதை தொடர வேண்டும் என்பதை அறிந்தேன். முன்னதாக எனக்கு பைலட் ஆகணும் ஆசை இருந்தது, அப்புறம் கிரிக்கெட் மீது ஆர்வம் இருந்தது'' என்றார்.
மேலும் ஹாலிவுட்டில் இருந்து நடிகர் ஜேசன் ஸ்டேதம் உங்களை அழைத்து ஒரு படம் இயக்க சொல்லி உடன் இந்தியாவில் இருந்து ஒரு நடிகரை அழைத்து வரச் சொன்னால் யாரை அழைப்பீர்கள் என்ற கேள்விக்கு, என் அப்பா தான். இருவரும் கோட் சூட் போட்டு நடித்தால் நல்ல காம்பினேஷனாக இருக்கும்'' என்றார்.