பிளாஷ்பேக்: ஒரே இயக்குநரின் அதிகப்படியான திரைப்படங்களுக்கு வசனம் எழுதிய வசனகர்த்தா | 'ஜனநாயகன்' படத்தை மாற்றுவாரா 'ஸ்பைடர் மேன்' | ஜூலை 31ல் ஒரே ஒரு ரிலீஸ் | 'அரசன்' படப்பிடிப்பில் மீண்டும் தாமதம் ? | ஆக., 21ல் 'மொத ராத்திரி' ரிலீஸ் | காணாமல் போன நடிகரை 16 வருடமாக தேடும் பாலிவுட் நடிகை | சினிமாவில் அடுத்து களம் இறங்கும் காமெடியன்கள் | 2031ல் விஜய், உதயநிதி, தனுஷ் போட்டி? | 45 நாளில் முடிந்த 'லைட் வெயிட் பேபி' படப்பிடிப்பு: ஆகஸ்டில் பர்ஸ்ட் லுக் வெளியீடு | ட்ரோல் செய்பவர்களை புறக்கணித்துவிடுங்கள் : அல்லு அர்ஜூன் அறிவுரை |

இசையமைப்பாளராக அறிமுகமான ஹிப் ஹாப் ஆதி, கடந்த 2017ம் ஆண்டு இயக்கி நடித்த படம், 'மீசைய முறுக்கு'. இந்தப் படம் நல்ல வரவேற்பு பெற்றது. அதன்பிறகு ஆதி நடித்த படங்கள் பெரிய வரவேற்பை பெறவில்லை. இந்த நிலையில் தன் நடிப்பில் வெற்றி பெற்ற மீசைய முறுக்கு படத்தின் இரண்டாவது பாகத்தை இயக்கி, நடித்து வருகிறார். இப்படத்தில், சைத்ரா ஆச்சர், கேதிகா ஷர்மா, ரம்யா ரங்கநாதன் என 3 பேர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.
மேலும் ஹர்ஷத் கான், கருணாஸ், நாசர், ஆடுகளம் நரேன், கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அவ்னி மூவீஸ் மற்றும் பென்ஸ் மீடியா சார்பில் குஷ்பு சுந்தர், ஏ.சி.எஸ். அருண்குமார் தயாரித்துள்ளனர். செப்டம்பர் 25ம் தேதி படம் வெளியாகிறது
படம் குறித்து ஆதி வெளியிட்டுள்ள பதிவில் “ஒரு கனவாகத் தொடங்கியது, இன்று கோடிக்கணக்கான மக்களின் உணர்வாக மாறியுள்ளது. அந்த மாயா ஜாலத்தை மீண்டும் ஒரு முறை 'மீசைய முறுக்கு 2' மூலம் அனுபவிக்க வேண்டிய நேரம் வந்து விட்டது” என்று தெரிவித்துள்ளார்.