சோசியல் மீடியா நெகட்டிவிட்டி... கைவசம் 7 படங்கள்... அண்ணாமலை ரீமேக் : சிவகார்த்திகேயனின் சுவாரஸ்ய பேச்சு | டாப் ஹீரோக்கள் படங்களில் அம்மாவாக நடித்து அசத்திய நடிகைகள் | தேவயானி மகள் நாயகியாக நடிக்கும் 'ப்ளாக் நைட் பாய்ஸ்' | அஜித்தின் டேர் டெவில் : ஸ்ரீலீலாவுக்கு பதிலாக கயாடு லோஹர் | பெண்களை மையமாக கொண்ட படங்கள் பாக்ஸ் ஆபிஸில் சவால்களை சந்திக்கின்றன : ராதிகா ஆப்தே | சமையல் கலைத் துறைக்கு பேரிழப்பு : செப் தாமு மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல் | மூக்குத்தி அம்மன் 2 படத்திற்காக நயன்தாராவுக்கு 60 அடியில் கட் அவுட் | ஜெயிலர் 2வில் நீக்கப்பட்ட சந்தானத்தின் காட்சிகள் ஓடிடியில் வெளியாகிறதா? | ஆர்ஆர்ஆர் படத்தை விட 5 முதல் 6 மடங்கு பிரம்மாண்டமானது வாரணாசி என்கிறார் ராஜமவுலி! | வாடிவாசலை தவிர்த்துவிட்டு வேறு படங்களை எடுப்பது ஏன்? : கலைப்புலி தாணு விளக்கம் |

நடிகர் ரவிமோகன், மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்துக்கு விண்ணப்பித்து பிரிந்து வாழ்கின்றனர். இந்த விவாகரத்து நிலுவையில் இருக்கும் நிலையில், சில நாட்களுக்கு முன்பாக தனக்கு நேர்ந்த கொடுமைகள் அனைத்தையும் செய்தியாளர்களை சந்தித்து விளக்கமளித்தார். அத்துடன், தனக்கு விவாகரத்து கிடைக்கும் வரையில் படங்களில் நடிக்கப்போவது இல்லை என்றும் தெரிவித்தார். சில நாட்களுக்கு பிறகு மனம்மாறிய ரவிமோகன், மீண்டும் படங்களில் நடிக்க துவங்கினார். யோகிபாபுவை வைத்து ‛அன் ஆர்டினரி மேன்' படத்தை முதன்முறையாக இயக்கியும் வருகிறார்.
இந்த நிலையில், நண்பர்கள் தினத்தை முன்னிட்டு தனது சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்ட பதிவில், ‛எனக்கு மிகவும் பிரியமான மக்களுக்கு இனிய நண்பர்கள் தின நல்வாழ்த்துகள். உண்மையான நண்பர்களாக என் பக்கபலமாக நிற்பதற்கு நன்றி. சிலர் நீதிமன்ற அவமதிப்புக்கு இணையான வழிகளில் தொடர்ந்து செயல்பட்டு வருவது துரதிர்ஷ்டவசமானது. என்னை பொறுத்தவரை, ஒரு விஷயத்தை தெளிவுபடுத்த விரும்புகிறேன்: நான் உயிரோடு இருக்கும் வரை, நாங்கள் நால்வரும் ஒரே அறையில் மீண்டும் ஒன்றாக இருக்கவே மாட்டோம். எப்போதும் மகிழ்ச்சியாக இருங்கள், உங்கள் நண்பர்களை கவனமாகத் தேர்ந்தெடுங்கள்' எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவு வைரலாகி வருகிறது.
ஆட்டம் போட்ட ரவிமோகன்
அத்துடன், தனது இன்ஸ்டா பக்கத்தில் உற்சாக மிகுதியில் நடனமாடும் வீடியோவும், தன் தந்தை, தாய், அண்ணன் ஆகியோருடன் இருக்கும் படத்தையும் பகிர்ந்த ரவிமோகன், ‛நேற்று இரவு என் குடும்பத்தினருக்காக, நான் இயக்குனராக அறிமுகமாகும் அன் ஆர்டினரி மேன் திரைப்படத்தின் சில காட்சிகளையும் அதன் இசையையும் காட்டினேன். என் குடும்பத்தினர், குறிப்பாக என் அப்பா எனக்காக உற்சாகமாக கைதட்டிய அந்த தருணம், இந்த உலகில் உள்ள ஒவ்வொரு குழந்தைக்கும் அவர்களின் பெற்றோரிடமிருந்து கிடைக்க வேண்டும் என்று நான் மனதார பிரார்த்திக்கிறேன்' எனப் பதிவிட்டுள்ளார்.