முன்னணி இளம் ஹீரோயின் யார்? அனிஷ்மா, மமிதா, கயாடு லோஹர் இடையே கடும் போட்டி | தீபாவளி ரிலீசுக்கு வரிசைகட்டும் படங்கள் | ஒரே வாரத்தில் இரண்டு படங்களில் பிரியங்கா மோகன் | 7 மில்லியன் லைக்குகளைப் பெற்ற தீபிகா படுகோனே 'பிரக்னன்சி போட்டோஸ்' | நிவேதிதா சதீஷ் திருமணம்: நீண்ட நாள் காதலரை மணக்கிறார் | 'வைல்ட் தமிழ்நாடு': வன ஆவணப் படம் வெளியானது | கருப்பட்டி: மனைவி கொலையை துப்பறியும் கணவனின் கதை | பிளாஷ்பேக்: எம்ஜிஆரின் கிருஷ்ணன் - குசேலன் உறவு | பிளாஷ்பேக்: திருட்டு கதைக்கு 2 தேசிய விருது | முன்பதிவு : கடும் போட்டியில் கார்த்தி, சூரி படங்கள் |

வாரந்தோறும் ஓடிடியில் புதுப்படங்கள் வெளியாகி வரும் நிலையில், இந்த வாரம் வெளியாகவுள்ள படங்கள் குறித்துத் தெரிந்து கொள்ளலாம்.
அரூபி(Aroopi)
மலையாள இயக்குநர் அபிலாஷ் வாரியர் இயக்கத்தில் வைசாக் ரவி, நேஹா சாவ்லா, ஜாய் மேத்யூ உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் ' அரூபி(Aroopi)'. கடந்த ஜூலை 3ம் தேதி திரையரங்குகளில் வெளியான இந்த படம் நாளை ( ஆக.14ம் தேதி) அமேசான் ப்ரைம், சிம்பிளி சவுத் தளங்களில் வெளியாகவுள்ளது.
காட்டாளன் (kattalan)
மலையாள இயக்குநர் பால் ஜார்ஜ் இயக்கத்தில் ஆண்டனி வர்கீஸ், துஷாரா விஜயன், சுனில் மற்றும் கபீர் துஹான் சிங் உள்ளிட்டோர் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் ' காட்டாளன் (kattalan)'. இந்த படம் இன்று (ஆக.13ம் தேதி) மனோரமா மேக்ஸில் வெளியாகியுள்ளது.
மிஸ்டர் வொர்க் ப்ரம் ஹோம்(Mr.Work from Home)
தெலுங்கு இயக்குநர் மதுதீப் செலிகானி இயக்கத்தில், த்ரிகுன் மற்றும் பாயல் ராதாகிருஷ்ணா நடிப்பில் வெளிவந்த திரைப்படம் 'மிஸ்டர் வொர்க் ஃப்ரம் ஹோம் (Mr.Work from Home)'. இந்த படம் நாளை (ஆக.14ம் தேதி) சன் நெக்ஸ்டில் வெளியாகவுள்ளது.
ஹார்ட்டின் (Heartin)
அறிமுக இயக்குநர் கிஷோர் குமார் இயக்கத்தில், சனந்த், மடோனா செபாஸ்டியன் மற்றும் எமயா டி ஆகியோர் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் ' ஹார்ட்டின் (Heartin)'. காமெடி மற்றும் ரொமான்டிக் திரைக்கதையுடன் வெளியான இந்த திரைப்படம் நாளை ( ஆக.14ம் தேதி) அமேசான் ப்ரைம் மற்றும் சிம்பிலி சவுத் தளத்தில் வெளியாகவுள்ளது.




