முன்னணி இளம் ஹீரோயின் யார்? அனிஷ்மா, மமிதா, கயாடு லோஹர் இடையே கடும் போட்டி | தீபாவளி ரிலீசுக்கு வரிசைகட்டும் படங்கள் | ஒரே வாரத்தில் இரண்டு படங்களில் பிரியங்கா மோகன் | 7 மில்லியன் லைக்குகளைப் பெற்ற தீபிகா படுகோனே 'பிரக்னன்சி போட்டோஸ்' | நிவேதிதா சதீஷ் திருமணம்: நீண்ட நாள் காதலரை மணக்கிறார் | 'வைல்ட் தமிழ்நாடு': வன ஆவணப் படம் வெளியானது | கருப்பட்டி: மனைவி கொலையை துப்பறியும் கணவனின் கதை | பிளாஷ்பேக்: எம்ஜிஆரின் கிருஷ்ணன் - குசேலன் உறவு | பிளாஷ்பேக்: திருட்டு கதைக்கு 2 தேசிய விருது | முன்பதிவு : கடும் போட்டியில் கார்த்தி, சூரி படங்கள் |

புராணத்தில் பகவான் கிருஷ்ணருக்கும், எளிய மனிதரான குசேலனுக்கும் இந்த உறவு பிரபலமானது. அதேபோன்று எம்ஜிஆருக்கு பல குசேலர்கள் இருந்தார்கள். அவர்களில் முக்கியமானவர் காமெடி நடிகர் இடிச்சபுளி செல்வராஜ். நாடகத்தில் இருந்து சினிமாவிற்கு வந்த இவர் எம்ஜிஆர் மீது கொண்டிருந்த பற்றின் காரணமாக அவர் படத்தில் மட்டும்தான் நடிப்பேன் என்பதில் உறுதியாக இருந்தார்.
'ஆயிரத்தில் ஒருவன்' படத்தில் ஒரு சிறிய கேரக்டரில் முதலில் அறிமுகமானார். எம்ஜிஆர் நடித்த 'ராமன் தேடிய சீதை, இதயவீணை, பட்டிக்காட்டு பொன்னையா, நேற்று இன்று நாளை, சிரித்து வாழ வேண்டும், நினைத்ததை முடிப்பவன், பல்லாண்டு வாழ்க, உழைக்கும் கரங்கள், இன்று போல் என்றும் வாழ்க' ஆகிய திரைப்படங்களில் நடித்தார். சில எம்ஜிஆர் படங்களுக்கு உதவி இயக்குனராகவும் பணிபுரிந்துள்ளார். குறிப்பாக எம்ஜிஆர் நடித்த 'இதயக்கனி, உலகம் சுற்றும் வாலிபன்' ஆகிய இரண்டு படங்களிலும் இவர் உதவி இயக்குனராக பணிபுரிந்துள்ளார்.
எம்ஜிஆர் தேர்தலில் நின்று முதல்வர் ஆன பின்னர் தான் இடிச்சபுளி செல்வராஜ் முதல் முதலாக ரஜினிகாந்த் நடித்த 'தர்மயுத்தம்' என்ற திரைப்படத்தில் நடித்தார். அதன் பிறகு ரஜினியின் 'மூன்று முகம், தாய் வீடு', டி ராஜேந்தரின் 'தங்கைக்கோர் கீதம்', விஜயகாந்த் நடித்த 'நல்ல நாள், அலை ஓசை', ரஜினிகாந்த் நடித்த 'வேலைக்காரன்' உள்பட பல திரைப்படங்களில் நடித்தார்.
எம்ஜிஆருக்கும், இடிச்சபுளிக்கும் ஆழமான நட்பு இருந்தது. தனது திருமணத்திற்கு எம்ஜிஆரை திருமணத்திற்கு அழைத்தார் தவிர்க்க முடியாத காரணத்தால் எம்ஜிஆர் திருமணத்திற்கு வரவில்லை. ஆனால் மறுநாள் எம்ஜிஆர், இடிச்சபுளி செல்வராஜை அவரது மாமானார் வீட்டில் சந்தித்து, மணமக்களை வாழ்த்தி ஒரு கணிசமான தொகையை கொடுத்து திரும்பினார்.
எம்ஜிஆரின் பொன்மொழிகளில் ஒன்று 'என்னை நம்பி கெட்டவர்கள் யாருமில்லை. நம்பாமல் கெட்டவர்கள் அதிகம்'.




