ஆஷா போஸ்லேவை போற்றும் ஏஆர் ரஹ்மானின் மியூசிக் வீடியோவில் ரஜினி, கமல் | ஹிந்தியில் வெற்றித்தடம் பதிப்பாரா பாலாஜி மோகன்? | மகாத்மா காந்தியாக நடிக்கும் 'அஞ்சான்' பட வில்லன் | ரிலீஸான சுவடே தெரியாமல் ஓடிடிக்கு வந்த நட்சத்திர குடும்ப வாரிசுகள் படம் | தந்தையின் விருப்பத்தை நிறைவேற்ற ரிஸ்க் எடுப்பார்களா நாகார்ஜுனா அன்ட் சன்ஸ் ? | மீண்டும் வெற்றியை பதிவு செய்வாரா மமிதா பைஜூ? | மீண்டும் தனுஷை இயக்கும் வெங்கி அட்லூரி | பார்வையற்ற போலீஸ் அதிகாரியாக நடிக்கிறாரா சூர்யா? | விஜய் சீட் கொடுக்க மறுத்த அந்த இயக்குனர் யார்? | 'ஜனநாயகன் முதல் பியார் பிரேமா கல்யாணம்' வரை: இந்த வார ஓடிடி பட்டியல் வெளியீடு...! |

தமிழக முதல்வர் ஜோசப் விஜய் நடிப்பில் வெளியான கடைசி படமான 'ஜனநாயகன்' முதல் பல காதல் படங்கள் இந்த வாரம் ஓடிடியில் வெளியாகவுள்ளது.
ஜனநாயகன்
இயக்குநர் எச்.வினோத் இயக்கத்தில் தமிழக முதல்வர் விஜய் நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் சுமாரான வரவேற்பை பெற்ற திரைப்படம் 'ஜனநாயகன்'. இந்த படத்தில் மமிதா பைஜு, பூஜா ஹெக்டே, பாபி தியோல், பிரகாஷ் ராஜ், கவுதம் வாசுதேவ், நரேன், பிரியாமணி ஆகியோர் நடித்தனர். 300 கோடி வசூலை ஈட்டிய இந்த திரைப்படம் விஜயின் கடைசி படமாக அமைந்ததால், தியேட்டரில் அவரது ரசிகர்கள் கண்ணீர் மல்க படத்தைப் பார்த்து ரசித்தனர். மேலும் தற்போது அவர்களுக்கு ஒரு வாய்ப்பாக நாளை (ஆக.21ம் தேதி) ஜீ5 தளத்தில் வெளியாகிறது.
பியார் பிரேமா கல்யாணம்
இயக்குநர் இளன் இயக்கி, ஹீரோவாக அறிமுகமாகும் திரைப்படம் 'பியார் பிரேமா கல்யாணம்'. இதில் சான்வி மேக்னா, ராதிகா சரத்குமார், யோகி பாபு, எம்.எஸ்.பாஸ்கர், கீதா கைலாசம், இளங்கோ குமாரவேல் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படம் நாளை ஆக.21ம் தேதி நெட்பிளிக்ஸ் தளத்தில் நேரடியாக வெளியாகிறது.
சென்னை லவ் ஸ்டோரி
தெலுங்கு இயக்குநர் ரவி நம்புரீ இயக்கத்தில் கிரண் அப்பாவரம், ஸ்ரீ கவுரி பிரியா ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் 'சென்னை லவ் ஸ்டோரி'. இந்த படம் வெளியாகி ரூ.50 கோடிக்கும் மேல் வசூல் செய்ததாகப் படக்குழு சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்த படம் நாளை (ஆக.21ம்) சோனி லைவ்வில் வெளியாகவுள்ளது.
மிஸ்டர் மிடில் கிளாஸ்
தெலுங்கு இயக்குநர் ஜி.நாகேஸ்வர ரெட்டி இயக்கத்தில், நடிகர் மேகா ஸ்ரீகாந்த், லயா கோர்ட்டி ஆகியோர் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் ' மிஸ்டர் மிடில் கிளாஸ்'. இந்த திரைப்படம் பிரைம் வீடியோவில் வெளியாகியுள்ளது.
என் வழி தனி வழி
மலையாள இயக்குநர் பி.ஜெரின் இயக்கத்தில் ஹேமா, அபிலாஷ் நரிக்குனி, பிந்து பாலா, ஜோபன் ஜேக்கப் ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் என் வழி தனி வழி'. இந்த படம் ஆக.18ம் தேதி ஹூங்கமா தளத்தில் வெளியாகியுள்ளது.