தெலுங்கில் லாபத்தை ஆரம்பித்த 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' | பல தோல்விகளுக்குப் பிறகு வெற்றியைப் பார்த்த ரவி தேஜா | டிஜே பிளாக்கிற்கு திருமணம் | 3 வருடங்களுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மகிமா நம்பியார் | பிளாஷ்பேக் : ஒரே ஹிந்திப் படத்தை காப்பி அடித்து உருவான 2 தமிழ் படங்கள் | பிளாஷ்பேக் : இரண்டு வேடங்களில் நடித்த ராஜசுலோச்சனா | கனவிலும் நினைக்கவில்லை : கவின் நெகிழ்ச்சி | ‛ஜெயிலர் 2' முதல் பாடல் வெளியீடு : பாடலின் முழு லிரிக் இதோ... | மூக்குத்தி அம்மன் 2வில் வில்லியாக ரெஜினா | ஹாய் பட டிரைலருக்கு வரவேற்பு |

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் ஜிவி பிரகாஷ்குமார். ஒரு பக்கம் இசை, மறுபக்கம் நடிப்பு என பிஸியாக இருக்கிறார்.
கடந்த வாரம் ஆகஸ்ட் 14ம் தேதி அவரது இசையில் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' மற்றும் 'மகுடம்' ஆகிய படங்கள் வெளிவந்தன. இந்த இரண்டு படங்களும் தெலுங்கிலும் டப்பிங் ஆகி வெளியானது. இதில் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' படம் வெற்றிகரமாக ஓடி வருகிறது.
இன்று ஆகஸ்ட் 21ம் தேதி ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ள தெலுங்குப் படமான 'இருமுடி' படம் வெளியாகி உள்ளது. இப்படத்திற்கான முதல் காட்சி வரவேற்பு அமோகமாக இருப்பதாக டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்தப் படம் தமிழிலும் டப்பிங் ஆகி வெளியாகி உள்ளது.
இப்படத்தின் வரவேற்பு குறித்து அனிருத் ஸ்டைலில் எமோஜிக்களை பதிவிட்டுள்ளார் ஜிவி. அடுத்தடுத்து இரண்டு வெற்றிகளைக் கொண்டாடத் தயாராகிவிட்டார்.