அருள்நிதியின் ‛வேட்ட சாமி' படம் டிசம்பரில் வெளியாகிறது | ராமாயணா இரண்டாம் பாகம் 2028-க்கு தள்ளிவைக்கப்பட்டதா? | பாக்கெட் நாவல் படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கின | முதல் பாடலிலேயே சாதனையை துவங்கிய தமிழ் சினிமாக்கள் | செல்ல நாயின் பின்னணியில் உருவாகும் முகேன் ராவ்வின் 'மைலோ' | சந்தானத்தின் 'லவ் பைட்' படப்பிடிப்பு நிறைவு : டிசம்பரில் ரிலீஸ் | சூர்யாவின் காமெடியை குடும்பத்தோடு ரசிக்கலாம் : 'சீன்' இயக்குநர் சொல்கிறார் | பிளாஷ்பேக் : கண்ணதாசனை கடனிலிருந்து மீட்ட தேவிகா | கணவரை பிரிந்தாரா தாமரை செல்வி? | புதியவர்களைத் தேடும் 'காந்தாரா' ரிஷப் ஷெட்டி |

நடிகர் சூர்யா சமீபகாலமாக தனது ரசிகர் மன்றங்களை விரிவுப்படுத்தி வருகிறார். ரசிகர் மன்ற நிர்வாகிகள், ரசிகர்களை கூட்டி அவர்கள் மத்தியில் பேசி வருகிறார். இந்நிலையில் அப்படி ரசிகர் மத்தியில் அவர் பேசியது வைரலாகி வருகிறது. சென்னை பரணிபுத்தூரில் இன்று நடந்த ரசிகர் மன்ற நிர்வாகி கூட்டத்தில் அவர் பேசிய வைரல் ஆகி வருகிறது.
அதில், ‛‛அன்பை மட்டுமே விதைப்போம். ஒரு சமூக ஊடகத்தில் ஒரு முட்டாள் ஒரு பதிவைப் போட்டான் என்பதற்காக நாமளும் பேச ஆரம்பிக்கும் போதுதான் நாம காயப்பட்டுப் போவோம். நாம நாமாகவே இருப்போம். அவங்க அவங்களாகவே இருக்கட்டும். நாம எதுவும் பேசத் தேவையில்லை. அவங்களுக்குப் புரிய வைக்கணும், மாத்தணும்னு முயற்சி பண்ணா கொஞ்சம் கஷ்டம்.. சில பேருக்கு புரியும். முக்காவாசி பேருக்கு அது புரியாது. உங்க ஆற்றலை வீணாக்கிக்க வேண்டாம். உங்களுக்குப் பிடிச்சதை நேர்மையா தினமும் தினமும் பண்ணுங்க. நிச்சயமா வெற்றி கிடைக்கும்'' என்றார்.