நவம்பர் 20ல் மும்முனைப் போட்டி - முன்பதிவில் முந்துவது யார் ? | தென்னிந்திய வசூலில் சாதனை படைத்த 'ராமாயணா' | மதிவதனி, காதம்பரி, பவானி, கோகிலா : நயன்தாரா நடிப்பில் கலக்கிய படங்கள் | ''மீண்டும் பிறந்தாலும்… நீயே வேண்டும்…'' - நயன்தாராவுக்கு விக்னேஷ் சிவனின் பிறந்தநாள் வாழ்த்து | குடும்பத்தின் மூத்தவர்களுடன் சமந்தா தம்பதிக்கு நடந்த வழிபாட்டு நிகழ்ச்சி | பீட்சா பாய்ஸ் கதை என்ன? : புனேவை சேர்ந்த இயக்குனர் விளக்கம் | தமிழில் ஏன் தலைப்பு இல்லை : தங்கர்பச்சான் ஆதங்கம் | 20 ஆண்டுகள் 124 படங்கள் : ஜி.வி.பிரகாஷ் நெகிழ்ச்சி | இரண்டு வார இடைவெளியில் அடுத்தடுத்து வெளியாகும் மம்முட்டி படங்கள் | இரண்டே மாதத்தில் பிரித்விராஜ் - மஞ்சு வாரியரின் 'ஒடியன்' படப்பிடிப்பு நிறைவு |

நடிகர் சிரஞ்சீவி இளம் நடிகர்களுக்கு சவால் விடும் வகையில் தொடர்ந்து படங்களை ஒப்புக்கொண்டு நடித்து வருகிறார். இந்த வகையில், சமீப நாட்களாக அவர் பாபி கொல்லி இயக்கத்தில் நடித்து வரும் 'காக' படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதே சமயம், கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பே வசிஷ்டா இயக்கத்தில் ஆரம்பிக்கப்பட்ட 'விஸ்வம்ப்ரா' திரைப்படம் குறித்து எந்தவித அப்டேட் தகவல்களும், ரிலீஸ் தேதி குறித்தும் செய்திகள் வெளியாகவே இல்லை.
திரிஷா, ஆஷிகா ரங்கநாத் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ள இந்தப் படம் இந்த வருடமே வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. அதே சமயம், தற்போது படத்தின் கிராபிக்ஸ் மற்றும் வி.எப்.எக்ஸ் காட்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து உள்ளதால், அதன் பணிகளில் படக்குழுவினர் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர். அதனால்தான், அந்தப் பணிகள் முடியும் வரை இடையில் விளம்பரங்களோ அல்லது ரிலீஸ் தேதி குறித்தோ எந்த அப்டேட் தகவல்களையும் வெளியிடாமல் அமைதி காத்து வருகின்றனர் என்று சொல்லப்படுகிறது.




