ஆர்யாவின் 40வது படம் டிசம்பர் 4ல் ரிலீஸ் | அப்பாகுட்டி : விஜய் ஆண்டனியின் செண்டிமென்ட் நம்பிக்கை | தமிழ் ‛டைட்டானிக்' 7 ஆண்டுகள் ஆனாலும் இப்போதும் ரசிகர்களுக்கு பிடிக்கும் : கலையரசன் | பிளாஷ்பேக் : எம்ஜிஆர் வழக்கறிஞராக நடித்த ஒரே படம் | விசித்திரமான இன்ஸ்டாகிராம் வதந்திக்கு மினியன் மூலம் பதிலளித்த மமிதா பைஜூ | கமல்ஹாசன் நடிக்க வேண்டிய இத்தனை பிரம்மாண்ட படங்கள் கைவிடப்பட்டதா? | ரஜினியின் முகத்தில் சிகரெட் புகை ஊதும் காட்சியில் பதட்டமடைந்த வித்யா பாலன்! | ராம் சரணுக்கு ஜோடியாக நடிக்கும் சாரா அர்ஜூன்! | 'வாரணாசி' படப்பிடிப்பில் இருந்து ஓய்வு எடுத்த ராஜமவுலி: அமெரிக்காவில் குடும்ப விழாவில் பங்கேற்பு! | பூஜா ஹெக்டே 36வது பிறந்தநாள்: 'ஸ்ரீ ஸ்ரீ' படக்குழு சிறப்பு போஸ்டரை வெளியிட்டது! |

ரஜினிகாந்த் நடிப்பில், நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ள படம் 'ஜெயிலர் 2'. அக்டோபர் 15ம் தேதி திரைக்கு வரும் இப்படத்தில் ஹிந்தி நடிகை வித்யா பாலன், காந்தா என்ற வில்லி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த வில்லி வேடத்தில் நடித்தபோது சிகரெட் பிடித்து, அந்தப் புகையை ரஜினிகாந்தின் முகத்தை நோக்கி ஊதும் ஒரு காட்சியில் நடித்துள்ளார்.
இது குறித்து வித்யாபாலன் வெளியிட்டுள்ள செய்தியில், ''இந்த வேடத்தில் எனது தன்னம்பிக்கையைக் காட்ட வேண்டியிருந்த போதிலும், ரஜினியின் முகத்தில் சிகரெட் பிடித்தபடி அந்த புகையை ஊத வேண்டும் என்றபோது, மிரண்டு விட்டேன். அந்த காட்சியில் மிகுந்த பதட்டத்துடன்தான் நடித்தேன். அதில் நடிப்பது எனக்கு மிகபெரிய சவாலாக இருந்தது'' என்று கூறியுள்ளார் வித்யா பாலன்.
இந்த ஜெயிலர்-2 படத்தில் ரம்யாகிருஷ்ணன், எஸ்.ஜே.சூர்யா, மிதுன் சக்ரவர்த்தி, யோகிபாபு, மிர்னா மேனன், சுராஜ் வெஞ்சாரமூடு உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள். அனிருத் இசையமைத்துள்ளளார்.