இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் பாரதிராஜா, பாக்யராஜிற்கு அஞ்சலி | ராதிகா ஆப்தே சர்ச்சை குறித்து மவுனம் கலைத்த கீர்த்தி சுரேஷ்! | பேசும் மற்றும் கேட்கும் திறனை மீட்டுத் தந்த மம்முட்டி : நெகிழ வைத்த குழந்தைகள் சந்திப்பு | பரத் பாலா - ஏ.ஆர். ரஹ்மான் படம் இந்திய சர்வதேசத் திரைப்பட விழாவிற்குத் தேர்வு | துல்கர் சல்மானின் பிராங்க்கில் மாட்டிக்கொண்ட விஜய் தேவரகொண்டா | நவாசுதீன் சித்திக்குடன் வேலை செய்வது நரகம் போன்றது : நடிகை தியா மிர்சா காட்டம் | தாய்மைப் பொறுப்புகள் குறித்த புகைப்படங்களை பகிர்ந்த பிரியங்கா சோப்ரா! | அறம் பட பாணியில் உருவாகும் வெப்சீரிஸில் நடிக்கும் தபு | தனுஷின் 'ஓம்' படத்தில் தனது கதாபாத்திரம் குறித்து தகவல் வெளியிட்ட ஸ்ரீலீலா! | மகள் ஐஸ்வர்யா பற்றி அவதூறு : கமிஷனர் அலுவலகத்தில் நடிகர் அர்ஜூன் புகார் |

‛பேபிஸ் டே அவுட்' என்ற ஹாலிவுட் படம் 1994ம் ஆண்டு வெளியாகி பெரும் வெற்றியை பெற்றது. ஒரு குழந்தையை கடத்த முயலும் 3 திருடர்களின் காமெடி முயற்சிதான் படத்தின் கதை. இந்த படத்தின் கதையை தழுவி தெலுங்கில் 'சிசிந்திரி' என்ற பெயரில் ஒரு படம் உருவானது. இந்த படத்தை நாகார்ஜூனா தயாரித்து, நடித்தார். குழந்தை நட்சத்திரமாக அவரது மகன் அகில் அக்னினேனி நடித்தார். நாகார்ஜுனாவின் மனைவியாக ஆம்னி நடித்தார்.
தமிழில் 'சுட்டிக்குழந்தை' என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியானது. இதேபோன்ற ஒரு நிகழ்வு அதற்கு முன்பே நடந்தது. 1987ம் ஆண்டு ஹாலிவுட் திரைப்படமான 'திரீ மென் அன்ட் எ கிரேடில்' (3 இளைஞர்களும் ஒரு தொட்டிலும்) என்ற படத்தை தழுவி தமிழில் 'தாயம்மா' என்ற பெயரில் ஒரு படம் தயாரானது. இத்திரைப் படத்தை கோபி பீம்சிங் இயக்கியிருந்தார். பாண்டியன், ஆனந்த் பாபு ஆகியோருடன் கீதாவும் ஒரு தலை ராகம் சங்கரும் நடித்திருந்தனர். இப்படத்தில் கவுண்டமணி மற்றும் செந்தில் காமெடி கேரக்டரில் நடித்திருந்தனர்.
ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் இளைஞர்களான பாண்டியன், ஆனந்த் பாபு ஆகியோர் நண்பர்களாகவும் அறைத் தோழர்களாகவும் இருக்கின்றனர். ஐஏஎஸ் படிக்கும் ரங்கராஜன் இவர்களது பக்கத்து வீட்டுக்காரர். ஒருநாள், பாண்டியனும், ஆனந்த் பாபுவும் தங்கள் வீட்டு வாசலில் ஒரு குழந்தையைக் கண்டெடுக்கின்றனர். மூன்று இளைஞர்களும் அவளுக்கு தந்தை இல்லை என்று நம்புகின்றனர். அப்போதிருந்து, அவர்களின் வாழ்க்கை முற்றிலும் மாறுகிறது. முதலில் குழந்தையை கைவிட முயல்கிறார்கள, பின்னர் குழந்தையை கவனித்து 'தாயம்மா' என்று பெயரிடுகிறார்கள். பின்னர் என்ன நடக்கிறது என்பது கதை. இந்த கதை மலையாளத்தில் 'தூவல்சுபர்சத்' என்ற பெயரில் தயாரானது. மலையாளத்தில் வந்த படத்தை தான் தமிழில் ரீமேக் செய்தனர்.




