ரொமான்டிக் படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகும் கிர்த்தி ஷெட்டி! | 'பெளசி' பட நாயகி இமான்வியின் பிறந்த நாளில் பிரபாஸ் கொடுத்த சுவையான ஆச்சரிய பரிசு! | ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' பட நடிப்பு குறித்து சல்மான்கான் கூறிய கருத்து வைரல்! | 'ஜெயிலர்-2' - தலைவர் காட்டுத் தீயைப் பற்ற வைக்கிறார்! : கார்த்திக் சுப்பராஜ் | 400 ஏழைக் குடும்பங்களுக்கு உதவிய ராஷ்மிகா | 'தனுஷ் 56' பட வாய்ப்பு கிடைத்தது எப்படி?: ப்ரீத்தி முகுந்தன் | 'அண்ணா' படத்தில் நான் நடிக்க ஒப்புக்கொள்ளவே இல்லையே ; அதிர்ச்சி தரும் அரவிந்த்சாமி | 2 கோடி மதிப்பிலான ரேஞ்ச் ரோவர் கார் வாங்கிய 'பிரேமலு' ஹீரோ | மோசடி பேர்வழி ; மஞ்சு வாரியருக்கு எதிராக டார்ச்சர் செய்யும் இயக்குனருக்கு மல்லிகா சுகுமாரன் பதிலடி | ஓடிடியில் வெளியான பிறகு அதிக அளவு தாக்குதலுக்கு ஆளாகும் பார்வதியின் படம் |

'பாகுபலி' படங்களுக்குப் பிறகு பான் இந்தியா ஸ்டார் ஆக உயர்ந்தவர் தெலுங்கு நடிகர் பிரபாஸ். அவரது நடிப்பில் உருவான 'தி ராஜா சாப்' படம் இந்த வருடம் பொங்கலை முன்னிட்டு வெளிவந்தது. சுமார் 400 கோடிக்கும் அதிகமான செலவில் தயாரிக்கப்பட்டதாக சொன்ன படம் சுமார் 200 கோடி வசூலை மட்டுமே கடந்ததாக சொல்லப்பட்டது. மிகப் பெரும் தோல்வியை சந்தித்த ஒரு படமாகவும் அமைந்தது.
அப்படத்தைத் தயாரித்த பியூப்புள் மீடியா பேக்டரி நிறுவனம் தயாரித்துள்ள 'கரிவிடி லட்சுமி' என்ற படம் அக்டோபர் 17ல் வெளியாக உள்ளது. அந்தப் படத்திற்கான பேட்டி ஒன்றில் தயாரிப்பாளர் டிஜி விஸ்வபிரசாத்திடம், 'தி ராஜா சாப்' தோல்வி குறித்து கேட்டனர்.
அதற்கு விஸ்வபிரசாத், “நாங்கள் மிகவும் மகிழ்ச்சியான மனநிலையில் இருக்கிறோம். என்னை தவறாகப் புரிந்துகொள்ள வேண்டாம். நெருக்கடியான ஒரு கால கட்டத்தில் படத்தை வெளியிட்டதுதான் நாங்கள் செய்த அடிப்படை தவறுகளில் ஒன்று. வேறொரு தேதியில் படம் வெளியாகி இருந்தால், அதன் முடிவு வேறாக இருந்திருக்கும். இப்போதைக்கு நாங்கள் 'கரிவிடி லட்சுமி'யை ரசித்துக் கொண்டிருக்கிறோம். அதைத் தொடர்ந்து ரசிப்போம்,” என்று கூறியுள்ளார்.
பொங்கல் சமயத்தில் தெலுங்கில் சிரஞ்சீவி நடித்து வெளிவந்த 'மனஷங்கர வரபிரசாத் காரு' படம் பெரிய வெற்றியைப் பெற்று 300 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. அந்த சமயத்தில் மொத்தம் 5 தெலுங்குப் படங்கள்தான் வெளியாகி இருந்தது என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று. அதையே தான் என தயாரிப்பாளர் சொல்லி இருக்கிறார் போலிருக்கிறது.




