செல்ல நாயின் பின்னணியில் உருவாகும் முகேன் ராவ்வின் 'மைலோ' | சந்தானத்தின் 'லவ் பைட்' படப்பிடிப்பு நிறைவு : டிசம்பரில் ரிலீஸ் | சூர்யாவின் காமெடியை குடும்பத்தோடு ரசிக்கலாம் : 'சீன்' இயக்குநர் சொல்கிறார் | பிளாஷ்பேக் : கண்ணதாசனை கடனிலிருந்து மீட்ட தேவிகா | கணவரை பிரிந்தாரா தாமரை செல்வி? | புதியவர்களைத் தேடும் 'காந்தாரா' ரிஷப் ஷெட்டி | அமெரிக்காவில் ஸ்பெஷலாக நடந்த 'ராமாயணா' பிரஸ் ஷோ | 'டாக்சிக்' அடுத்து ஆங்கிலத்தில் ரிலீஸ் ஆகிறதா 'பௌசி'? | பிரபாஸ் பிறந்தநாளில் அடுத்தடுத்து வந்த படங்களின் அப்டேட்ஸ் | ஐமேக்ஸ் தியேட்டரில் ரசிகர்களுடன் 'ஜெயிலர் 2' பார்த்த ரஜினிகாந்த் |

தெலுங்குத் திரையுலகத்தின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில், ஹனு ராகவுப்புடி இயக்கத்தில் பிரபாஸ் நடிக்க உருவாகி வரும் படம் 'பௌசி'. இமான்வி கதாநாயகியாக நடிக்க அனுபம் கேர், மிதுன் சக்கரவர்த்தி, பானுசந்தர், ஜெயப்பிரதா மற்றும் பலர் இப்படத்தில் நடிக்கின்றனர்.
இந்த வருடம் டிசம்பர் 3ம் தேதி இப்படம் வெளியாவதாக இருந்தது. இந்நிலையில் படத்தின் வெளியீட்டைத் தள்ளி வைத்துள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் ரவிசங்கர் அறிவித்துள்ளார். நானி நடித்து வெளியாக உள்ள 'தி பாரடைஸ்' படத்தின் விழாவில் கலந்து கொண்ட போது இது பற்றி அவர் தெரிவித்துள்ளார்.
“அது வேற லெவல் சினிமா, தயாரிப்புப் பணிகள் கொஞ்சம் தாமதமாவதால் படத்தின் வெளியீட்டை சற்றே தள்ளி வைக்கிறோம். 'பாகுபலி' படத்திற்குப் பிறகு பிரபாஸை இப்படியான ஒரு தோற்றத்தில் பார்த்திருக்க மாட்டீர்கள். பிரம்மாண்டமான ஒரு படமாக உருவாகி வருகிறது. இப்படத்தை வாழ்நாள் முழுவதும் கொண்டாடுவீர்கள்” என தனது பேச்சில் குறிப்பிட்டுள்ளார்.




