அர்ஜூன் தாஸ் நடிக்கும் 'ஜான் டோ' நவ.,13ல் ரிலீஸ் | 'கடவுள் தந்த பரிசு' படத்திற்கு ஒரே நாளில் ஆறு பாடல் கம்போஸ்: இளையராஜாவிற்கு நன்றி சொன்ன ராமராஜன் | 'அதிமனோகரம்' படத்துக்கு அதீத எதிர்பார்ப்பு வேண்டாம் ; தயாரிப்பாளர் முன்னெச்சரிக்கை அறிவிப்பு | சைபர் செக்யூரிட்டி கேப்டனாக கேரள காவல்துறையால் நியமிக்கப்பட்ட மம்முட்டி | பாலிவுட் இயக்குநர் டைரக்சனில் மீண்டும் ஒரு ஹாரர் படத்தில் மாதவன் | வாரிசு இயக்குநரின் படத்தில் மோகன்லால் ; கொச்சியில் நடைபெற்ற தொடக்க விழா பூஜை | கன்னட நடிகர் தர்ஷன் வழக்கில் புதிய திருப்பம் ; பல்டி அடித்த சாட்சி | 'டியூட்' இயக்குநரின் புதிய படத்திற்காக 10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணையும் சிம்பு - நயன்தாரா? | 'ஜெயிலர் 2'ல் மோகன்லால் காட்சிகள் குறைக்கப்பட்டதில் வருத்தம் தான்: தயாரிப்பாளர் ஆண்டனி பெரும்பாவூர் | 'இருமுடி' தயாரிப்பாளருக்கு தெலுங்கானா அரசு நோட்டீஸ் |

இந்தியாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் பிரபாஸ். தெலுங்கு நடிகராக இருந்தாலும், 'பாகுபலி' படத்தின் மூலம் பான் இந்தியா நடிகராக வளர்ந்தவர். இந்தியாவில் உள்ள முன்னணி ஹீரோயின்களுடன் அவர் நடித்து வருகிறார். ஆனால் அவரது முதல் ஹீரோயின் யார் தெரியுமா?. விஜயகுமாரின் மகள் ஸ்ரீதேவி விஜயகுமார்.
சத்யராஜ் நடித்த 'ரிக்ஷா மாமா' படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக நடித்த ஸ்ரீதேவி முதன் முதலாக ஹீரோயினாக நடித்த படம் 'ஈஸ்வர்'. தெலுங்கில் உருவான இந்த படத்தில் தான் பிரபாசும் அறிமுகமானார். அவருக்கு ஜோடியாக ஸ்ரீதேவி நடித்தார். அதன் பிறகு காதல் வைரஸ் படத்தின் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமானார். இந்தப் படம் அங்கு பெரிய வெற்றி பெற்றது அதன் பிறகு சில தெலுங்கு படங்களில் ஸ்ரீதேவி நடித்தார்.




