Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பிரபாஸ் பிறந்தநாளில் அடுத்தடுத்து வந்த படங்களின் அப்டேட்ஸ்

24 அக், 2026 - 10:54 IST
எழுத்தின் அளவு:
Prabhas-Birthday-Updates
Advertisement

பான் இந்தியா ஸ்டார் என ஒரே படத்தில் உயர்ந்தவர் தெலுங்கு நடிகர் பிரபாஸ். 'பாகுபலி' படங்களுக்குப் பிறகு அவர் நாயகனாக நடித்து வெளிவந்த பான் இந்தியா படங்களில் 'கல்கி 2898 ஏடி' படம் மட்டுமே 1000 கோடி வசூலைக் கடந்தது. மற்ற படங்கள் சில நூறு கோடி வசூலைக் கடந்தாலும் லாபமில்லாத படங்கள் என பாக்ஸ் ஆபீஸ் தகவல்கள் தெரிவித்தன. இருந்தாலும் பிரபாஸ் கைவசம் தற்போது நான்கைந்து பான் இந்தியா படங்கள் உள்ளன.

நேற்று அக்டோபர் 23 அவரது பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடித்து வரும் படங்களின் அப்டேட்ஸ்களை பிறந்தநாள் வாழ்த்துடன் அடுத்தடுத்து வெளியிட்டார்கள்.

ஹனுராகவபுடி இயக்கத்தில் பிரபாஸ் நடித்து வரும் 'பௌசி' படத்திற்காக மைத்ரி மூவி மேக்கர்ஸ் வீயோ ஒன்றை வெளியிட்டுள்ளது. சுதந்திர போராட்டத்திற்கு முந்தைய காலகட்ட வீடியோவாக அது உள்ளது. இப்படம் 2027 மார்ச் 19ம் தேதி வெளியாக உள்ளது.

சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் பிரபாஸ் நடித்து வரும் 'ஸ்பிரிட்' படம் 2027 அக்டோபர் 29 தீபாவளியன்று வெளியாகும் என ஒரு வாரம் முன்பே அறிவித்திருந்தார்கள். நேற்று இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா ஒரு சரக்கு பாட்டிலைத் திறக்க, அதை பிரபாஸ் பார்க்கும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு, 'உற்சாகம் மேலோங்கி உள்ளது,” எனக் குறிப்பிட்டுள்ளார்கள்.

'கல்கி 2898 ஏடி' தயாரிப்பு நிறுவனம் வைஜெயந்தி மூவிஸ் பிறந்தநாள் வாழ்த்துகளை சொல்லி, “கல்கி 2898 ஏடி யுனிவர்ஸ்-ன் அடுத்த அத்தியாயத்திற்கு நல்வரவு,” என்று பதிவிட்டுள்ளார்கள்.

பிரபாஸுக்கு இயக்குனர் பிரசாந்த் நீல் வாழ்த்து சொல்லும் வீடியோ ஒன்றை மைத்ரி மூவி மேக்கர்ஸ் வெளியிட்டுள்ளது. அதில் பிரசாந்திடம், எங்கே பிறந்தநாள் பரிசு, சலார் 2 எப்போது என பிரபாஸ் கேட்க, அதற்கு பிரசாந்த் நீல், 'அடுத்த வருடம் ஜூன்' என பதிலளிக்கிறார். இந்த வீடியோ தற்போது வைரலாகி உள்ளது.

பிரபாஸின் பிறந்தநாளை முனனிட்டு அடுத்தடுத்த அப்டேட்களை படக்குழுவினர் வெளியிட்டுள்ளதால் பிரபாஸ் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
40 ஆண்டுகளில் முதல்முறை : ஐமேக்ஸ் தியேட்டரில் ரசிகர்களுடன் 'ஜெயிலர் 2' பார்த்த ரஜினிகாந்த்40 ஆண்டுகளில் முதல்முறை : ஐமேக்ஸ் ... 'டாக்சிக்' அடுத்து ஆங்கிலத்தில் ரிலீஸ் ஆகிறதா 'பௌசி'? 'டாக்சிக்' அடுத்து ஆங்கிலத்தில் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film
    • நடிகர் : ஏ.கிருஷ்ணா
    • நடிகை : ஆராத்யா
    • இயக்குனர் :M.B.ராஜதுரை
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap