செப் தாமு உடல் தகனம் : கண்ணீருடன் பிரியாவிடை அளித்த பிரபலங்கள், ரசிகர்கள் | பிரபாஸின் ‛பௌசி' படத்தில் வரலாறு திரிப்பு... : இயக்குனர் மன்னிப்பு கேட்க நேதாஜியின் உறவினர் வலியுறுத்தல் | பிளாஷ்பேக்: பிரபல கர்நாடக இசைப் பாடகியை சினிமா நட்சத்திரமாக்கிய இயக்குநர் கே சுப்ரமணியம் | வாழ்நாள் முழுக்க ஒன்றாக பயணிப்போம் : வதந்திக்கு ராஷ்மிகா முற்றுப்புள்ளி | லோகேஷ் கனகராஜின் 'கைதி' வெளியாகி 7 ஆண்டுகள் நிறைவு! 'கைதி-2' எப்போது? | 17 ஆண்டுகளுக்குப் பிறகு தெலுங்கில் நடிக்கும் கங்கனா ரணாவத்! | கர்நாடகாவில் 'ராமாயணா' படத்தை விநியோகிக்கும் நடிகர் யஷ்! | 'அண்ணாமலை' ரீமேக் விவகாரம்! ரஜினியின் மக்கள் தொடர்பாளரின் கருத்துக்கு சிவகார்த்திகேயன் பதிலளிப்பாரா? | சிவகார்த்திகேயன், ‛பிளாக்' பாண்டி என்ன பிரச்னை : பழைய வீடியோ வைரல் ஆனது ஏன்? | 14 ஆண்டு காதல் : ஸ்பெயினில் கோலாகலமாக நடந்த அர்ஜுன் 2வது மகள் திருமணம் |

சமீபத்தில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‛ஜெயிலர் 2' திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. இதில் நடித்துள்ள பல நட்சத்திரங்களையும் இது வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது. குறிப்பாக மலையாளத்திலிருந்து நிறைய நட்சத்திரங்கள் இந்த படத்தில் இடம்பெற்றுள்ளனர். அப்படி ஒருவர் தான் மலையாளத்தில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்த வந்த ராஜேஷ் மாதவன் என்பவர். படத்தின் மிக முக்கியமான பாடலான ‛அல்ல போலேலோ' பாடலுக்கு சிவப்பு கலர் உடை அணிந்து ஆடுவாரே அவர் இவர் தான்.
அந்த பாடலில் ரஜினியுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்து உள்ளது. ஆனால் இவரை விட இவரது மனைவி தீப்தி காரத் தான் இது குறித்து ரொம்பவே சந்தோஷத்தில் மகிழ்ச்சியிலும் இருக்கிறார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறும்போது, “ராஜேஷ் மாதவனின் வாழ்க்கையில் இது ஒரு மைல் கல். சினிமாவை உயிராக நேசிப்பவர்களுக்கு ரஜினிகாந்தை நேரில் சந்திப்பதும் அவர் நடிப்பதை நேரில் பார்ப்பதும் வார்த்தைகளால் விவரிக்க முடியாத ஒரு கனவு. ரஜினிகாந்த் படப்பிடிப்பு தளத்திற்கு வரும் போதெல்லாம் அங்குள்ள ஆயிரக்கணக்கான நடன கலைஞர்களும் மற்ற கலைஞர்களும் எழுந்து நின்று கைதட்டி ஆரவாரம் செய்வார்கள். அதை நினைக்கும் போதே இப்போதும் எனக்கு சிலிர்ப்பாக இருக்கிறது” என்று கூறியுள்ளார்.