Advertisement

சிறப்புச்செய்திகள்

அல்லு அர்ஜூனின் 'ராக்கா' படத்தின் ஓராண்டு கவுண்டவுன் போஸ்டர் விரைவில் வெளியாகிறது! | துணை முதல்வர் பதவியை ராஜினாமா செய்கிறாரா பவன் கல்யாண்? | நானியின் 'தி பாரடைஸ்' நெட்பிளிக்ஸில் 5 மொழிகளில் வெளியானது! | 'ஜெயிலர் 2'வில் நடிக்க ஹிருத்திக் ரோஷன் சம்பளமே வாங்கவில்லையா? | 'சீன்' படத்தில் கண் பார்வை இல்லாத வேடத்தில் நடிக்கிறாரா சூர்யா?- ஜீத்து மாதவன் அளித்த விளக்கம் | ஓடிடி, சாட்டிலைட் உரிமையில் புதிய சாதனை படைத்த 'ராமாயணா' | 'ஜெயிலர் 2' குழுவிற்கு அல்லு அர்ஜூன் பாராட்டும் வாழ்த்தும்… | சின்னத்துரை: மூக்குத்தி அம்மனாக நடிக்கும் சுஜிதா | 'அப்பா குட்டி' டைட்டில்: இயக்குனர் விளக்கம் | தமிழில் வெளியாகும் அடுத்த மலையாள சூப்பர் ஹீரோ படம் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அக்டோபர் 23ல் எத்தனை படங்கள் ரிலீஸ் ?

22 அக், 2026 - 12:11 IST
எழுத்தின் அளவு:
How-many-films-will-be-released-on-23rd-October
Advertisement

2026ம் ஆண்டில் அதிக வசூலைக் குவித்து வரும் படமாக கடந்த வாரம் வெளியான ரஜினிகாந்த் நடித்த 'ஜெயிலர் 2' படம் இருக்கிறது. நீண்ட ஒரு இடைவெளிக்குப் பிறகு ரசிகர்கள் குடும்பம் குடும்பமாக வந்து இந்தப் படத்தைப் பார்ப்பதாக பல தியேட்டர்காரர்கள் அதிகாரப்பூர்வமாகவே அறிவித்துள்ளார்கள்.

பொதுவாக முன்னணி நடிகர்களின் படங்கள் வெளிவரும் போது ஒரு வாரம் முன்பும், ஒரு வாரம் பின்பும் வேறு புதிய படங்களை வெளியிடத் தயங்குவார்கள். அதிலும் 'ஜெயிலர் 2' போல ஒரு படம் ஓடி வரும் போது வேறு படத்தைத் தியேட்டர்காரர்களும் திரையிட மாட்டார்கள்.

இருப்பினும் நாளை வெள்ளிக்கிழமை அக்டோபர் 23ம் தேதி “டெலிவரி பாய், ஹைக்கூ, விடியும் காத்திரு' உள்ளிட்ட படங்கள் வெளியாகும் என முன்பே அறிவித்திருந்தார்கள். 'ஜெயிலர் 2' படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் சூழலில் தங்களது 'டெலிவரி பாய்' பட வெளியீட்டை நவம்பர் 27ம் தேதிக்குத் தள்ளி வைப்பதாக தயாரிப்பு நிறுவனம் நேற்று அறிவித்தது.

அதனால், நாளை 'ஹைக்கூ, விடியும் காத்திரு' ஆகிய படங்கள் மட்டுமே வெளியாக உள்ளது. 'ஹைக்கூ' படத்திற்கான பத்திரிகையாளர் காட்சியும் நேற்று நடந்துவிட்டது. எனவே, படம் நாளை கண்டிப்பாக வந்துவிடும். 'விடியும் காத்திரு' படத்திற்கு ஆன்லைன் முன்பதிவு ஆரம்பித்துவிட்டார்கள். இந்த நிலையில் நாளை (அக்.,23) மாலை 5 மணிக்கு டிரைலர் ரிலீஸ் செய்வதாக திடீரென அறிவித்துள்ளனர். டிரைலரே நாளைக்கு வெளியாக உள்ள நிலையில், படம் தள்ளிப்போகுமா என்பது தெரியவில்லை. அதுதான் இன்றைய நிலவரம்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
தேவா குழுவில் அடுத்த அதிர்ச்சி; அவரது பேவரைட் பாடகர் கிருஷ்ணராஜ் காலமானார்தேவா குழுவில் அடுத்த அதிர்ச்சி; ... தயாரிப்பாளர் எல்.கே.சுதீஷ் மகளுக்கு டும்டும்: மாப்பிள்ளை யார் தெரியுமா? தயாரிப்பாளர் எல்.கே.சுதீஷ் மகளுக்கு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film
    • நடிகர் : ஏ.கிருஷ்ணா
    • நடிகை : ஆராத்யா
    • இயக்குனர் :M.B.ராஜதுரை
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap