அல்லு அர்ஜூனின் 'ராக்கா' படத்தின் ஓராண்டு கவுண்டவுன் போஸ்டர் விரைவில் வெளியாகிறது! | துணை முதல்வர் பதவியை ராஜினாமா செய்கிறாரா பவன் கல்யாண்? | நானியின் 'தி பாரடைஸ்' நெட்பிளிக்ஸில் 5 மொழிகளில் வெளியானது! | 'ஜெயிலர் 2'வில் நடிக்க ஹிருத்திக் ரோஷன் சம்பளமே வாங்கவில்லையா? | 'சீன்' படத்தில் கண் பார்வை இல்லாத வேடத்தில் நடிக்கிறாரா சூர்யா?- ஜீத்து மாதவன் அளித்த விளக்கம் | ஓடிடி, சாட்டிலைட் உரிமையில் புதிய சாதனை படைத்த 'ராமாயணா' | 'ஜெயிலர் 2' குழுவிற்கு அல்லு அர்ஜூன் பாராட்டும் வாழ்த்தும்… | சின்னத்துரை: மூக்குத்தி அம்மனாக நடிக்கும் சுஜிதா | 'அப்பா குட்டி' டைட்டில்: இயக்குனர் விளக்கம் | தமிழில் வெளியாகும் அடுத்த மலையாள சூப்பர் ஹீரோ படம் |

அருள்நிதி நடித்த 'இரவுக்கு ஆயிரம் கண்கள்', உதயநிதி நடித்த 'கண்ணை நம்பாதே', ஜி.வி.பிரகாஷின் 'பிளாக் மெயில்' ஆகிய படங்களை இயக்கியவர் மு.மாறன். தற்போது விஜய் ஆண்டனி நடிக்கும் 'அப்பா குட்டி' படத்தை இயக்கியுள்ளார்.
ப்ரீத்தி அஸ்ரானி, சித்ரா லட்சுமணன், பகவதி பெருமாள், 'அருவி' மதன், ஜென்சன் திவாகர், லிதன்யா, ஹரிப்பிரியா, முருகானந்தம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
படம் குறித்து மு.மாறன் கூறியிருப்பதாவது: அப்பாவுக்கும், ஒரு குட்டிப் பொண்ணுக்கும் இடையில் நடக்குற பாசத்தைப் பற்றிய உணர்வுபூர்வமான கதை. அப்பாவை அந்தப் பொண்ணு ரொம்பச் செல்லமாக 'அப்பா குட்டி'ன்னுதான் கூப்பிடுவாள். அந்த வார்த்தையையே டைட்டில் ஆக்கிட்டோம். விஜய் ஆண்டனி, நாயகன், எடிட்டர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர் என நான்கு பொறுப்புகளையும் சிறப்பாக செய்து கொடுத்துள்ளார். படத்துக்கு தேவையான பட்ஜெட்டையும் அனுமதித்தார். அவரது கேரியரில் இது மிக முக்கியமான படமாக இருக்கும்.
அதேபோல 'அயோத்தி' படத்தில் கிடைத்தது போன்ற ஒரு பெரிய வரவேற்பு ப்ரீத்தி அஸ்ரானிக்கு இந்த படத்தில் கிடைக்கும். பேபி லிதன்யாவோட நடிப்பு இந்தப் படத்துல நிச்சயம் பேசப்படும். என்கிறார் மாறன்.




