பிளாஷ்பேக் : சினிமா பார்க்கச் சொல்லி உருவான தனிப்பாடல் | 2025ல் காமெடிக்கு பஞ்சம்: தியேட்டரில் சிரிப்பு சத்தம் கேட்கல | அடுத்த படம் குறித்து ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்ட தகவல் | 'டாக்சிக்' படத்தில் கங்காவாக நயன்தாரா! | திரிஷ்யம் முதல் பாகத்தின் பார்முலாவில் உருவாகும் 3ம் பாகம் : ஜீத்து ஜோசப் தகவல் | நடிகர் பிரித்விராஜின் தார்யா ஹிந்தி படப்பிடிப்பு நிறைவு | 'தி பெட்' படம், ஹீரோ ஸ்ரீகாந்த், ஹீரோயின் சிருஷ்டி புறக்கணிப்பு | விவாகரத்துக்கு பிறகும் ஒற்றுமையாக வலம் வரும் பிரியதர்ஷன் லிசி தம்பதி | ரஜினியின் அடுத்த பட இயக்குனர்?: நீடிக்கும் குழப்பம் | ரூ.50 கோடி வசூல் கிளப்பில் இணைந்த சர்வம் மாயா |

கொரட்டலா சிவா இயக்கத்தில் சிரஞ்சீவி, காஜல் அகர்வால் மற்றும் பலர் நடிக்கும் 'ஆச்சார்யா' தெலுங்குப் படத்தின் படப்பிடிப்பு கொரோனா தளர்வுகளுக்குப் பிறகு ஐதராபாத்தில் ஆரம்பமாகி நடந்து வருகிறது.
அப்படத்திற்காக ஐதராபாத் புறநகர் பகுதியில் மிகப் பிரம்மாண்டமான கோயில் செட் ஒன்றை அமைத்துள்ளார்களாம். 20 ஏக்கர் பரப்பளவில் சுமார் 20 கோடி செலவு செய்து அந்த செட்டை கலை இயக்குனர் சுரேஷ் செல்வராஜன் உருவாக்கியிருக்கிறார்.
இந்தியாவிலேயே இதுவரை எந்த ஒரு படத்திற்கும் இப்படி ஒரு செட் அமைத்ததில்லை என டோலிவுட் வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள்.
கோயில்கள், அறநிலையத் துறை பின்னணியில் தான் 'ஆச்சார்யா' படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளதாம். அதில் இந்த பிரம்மாண்ட கோயில் செட்டும் முக்கிய கதைக்களமாக உள்ளதாம். படத்தை இந்திய அளவில் பிரம்மாண்டமாக வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கிறார்கள்.