தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி : சொகுசு காருடன் மாயமான 'டிவி' நடிகை | சீரியல் நடிகை நந்தினி தற்கொலை | சூரியின் ‛மண்டாடி' படத்தில் இணைந்த இளம் நடிகர்! | ‛ஸ்பிரிட்' படத்தின் முதல் பார்வை எப்போது? | 'பெத்தி' படத்தில் வயதான தோற்றத்தில் ஜெகபதி பாபு | அஜித்குமாரின் பிறந்தநாளில் வெளியாகும் அஜித் ரேஸ் படம்! | கனவு நனவானது போல இருக்கிறது : நிதி அகர்வால் | பிளாஷ்பேக்: வெள்ளித்திரையில் வேற்று கிரகவாசிகளை காண்பித்த முதல் திரைப்படம் “கலைஅரசி” | 2025ல் கவனம் பெற்ற சிறிய படங்கள் | பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் |

தமிழ்த் திரையுலகின் நம்பர் ஒன் நடிகையாக இருப்பவர் நயன்தாரா. தனுஷ் தயாரிப்பில், விஜய் சேதுபதி நாயகனாக நடித்து வெளிவந்த 'நானும் ரவுடிதான்' படத்தில் நடிக்கும் போது அப்படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவனைக் காதலிக்க ஆரம்பித்தார்.
கடந்த ஐந்து வருடங்களாக காதல் பறவைகளாக பல நாடுகளையும் சுற்றி வந்துள்ளது இந்த காதல் ஜோடி. இருவரும் சென்னையில் ஒரே பிளாட்டில்தான் கடந்த சில வருடங்களாக வசிக்கிறார்கள்.
புத்தாண்டை முன்னிட்டும் ஜோடியாக புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களிடம் பொறாமையை ஏற்படுத்தினார்கள். இந்த ஜோடி எப்போது திருமணம் செய்து கொள்ளும் என்று பலரும் கேட்க ஆரம்பித்துவிட்டார்கள்.
இப்போது இருவருக்கும் பிப்ரவரி மாதம் முறைப்படி திருமணம் நடக்க உள்ளதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. இது வழக்கம் போல வதந்தியா அல்லது உண்மையா என்பது விரைவில் தெரிய வரும்.
சினிமா நட்சத்திரங்களின் காதல் திருமணங்கள் எப்போதுமே திடீரென்றுதான் நடக்கும். அது போல இந்தத் திருமணமும் திடீரென நடக்குமா அல்லது அனைவரையும் அழைத்து நடத்துவார்களா ?.