சைபர் கிரைம் நடவடிக்கை : பிரபாஸ் பட தயாரிப்பாளர் எச்சரிக்கை | ஷாருக்கான் மகன் டைரக்ஷனில் சிறப்பு தோற்றத்தில் சல்மான்கான், ரன்வீர் சிங் | 27 வருடங்களுக்குப் பிறகு இணைந்த கூட்டணி ; சம்மர் இன் பெத்லகேம் பார்ட்-2க்காகவா ? | அரசியல் பேசி சினிமா நண்பர்களை இழக்க விரும்பவில்லை : ‛உயிருள்ள வரை உஷா' ரீ-ரிலீஸ் நிகழ்வில் டி ராஜேந்தர் பேட்டி | 'மதராஸி' படத்தை வாங்கிய வேல்ஸ் நிறுவனம் | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | சினிமாவில் பொறுமை அவசியம் ; நல்ல படங்களுக்காக காத்திருக்கிறேன்... : புதுமுகம் ஜீவிதா! | தம்பதிகளின் உறவுச் சிக்கலை பேசும் ‛மதர்' | சிங்கப்பூரில் மறு தணிக்கை செய்யப்பட்ட 'கூலி' | பிளாஷ்பேக் : நண்பருக்காக சம்பளம் வாங்காமல் நடித்த மோகன் |
பொங்கல் வெளியீடாக தியேட்டர்களில் 'மாஸ்டர், ஈஸ்வரன்' உள்ளிட்ட படங்கள் வெளியாக உள்ளன. தமிழ்நாட்டில் தியேட்டர்களில் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டது தமிழக அரசு. ஆனால், அதற்கு டாக்டர்களும், சமூக ஆர்வலர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
மத்திய அரசு தரப்பிலும் அப்படி அனுமதி வழங்கியவது தவறு என சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் உயர்நீதிமன்றமும் ஜனவரி 11 வரையில் 100 சதவீத அனுமதிக்குத் தடை வழங்கி உத்தரவிட்டுள்ளது. விரைவில் தமிழக அரசு தனது உத்தரவை திரும்பப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே, தியேட்டர்களில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கினாலும் 'மாஸ்டர்' திரைப்படம் 3 மணி நேரப்படமாக இருப்பதால் சில நடைமுறைச் சிக்கல்கள் வரும் என்கிறார்கள்.
தியேட்டர்களில் ஒரு நாளைக்கு 4 காட்சிகள் நடக்கின்றன. விடுமுறை நாட்களில் 5 காட்சிகளுக்கு அனுமதி உண்டு. 4 காட்சிகள் என்று வைத்துக் கொண்டாலும் உதாரணமாக காலை 10 மணிக்கு முதல் காட்சி ஆரம்பமானால் இடைவேளைக்கான நேரத்தையும் சேர்த்தால் 'மாஸ்டர்' படம் முடிய மதியம் 1.30 மணி ஆகும்.
அதன்பின் அடுத்த காட்சிக்கு கொரோனா பாதுகாப்பு முறைகளின்படி தியேட்டர்களை சுத்தப்படுத்த, சுகாதாரப்படுத்த அரை மணி நேரம் ஆகும். அடுத்த காட்சிக்கு வரும் ரசிகர்களை சரியான விதத்தில் 'தெர்மல்' சோதனைக்குட்படுத்த அரை மணி நேரம் ஆகலாம்.
எனவே, இரண்டாவது காட்சியை மதியம் 2.30 மணிக்கே ஆரம்பிக்க முடியும். அது முடிய 5.30 ஆகும். அடுத்து மூன்றாவது காட்சியை ஆரம்பிக்க மாலை 6.30 மணி அது முடிய இரவு 10 மணி ஆகும். பின்னர் இரவுக் காட்சியை ஆரம்பிக்க 11 மணி ஆகிவிடும். அந்தக் காட்சி முடிவடைய நள்ளிரவு 1.30 மணி ஆகிவிடும்.
சிங்கிள் ஸ்கிரீன் உள்ள தியேட்டர்களில் மக்களை வரிசையில் நிற்க வைக்கவும், அவர்களது வாகனங்களை பார்க்கிங் செய்யவும் ஓரளவிற்கு எளிதாகவே முடிந்துவிடும். ஆனால், இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட ஸ்கிரீன்கள் உள்ள தியேட்டர்களில் இவற்றிற்கு கூடுதல் நேரம் பிடிக்கும்.
கொரோனா தளர்வுகளுக்குப் பிறகு கடந்த நவம்பர் மாதம் 10ம் தேதி தியேட்டர்கள் திறந்த பின் இந்த இரண்டு மாதங்களில் ஒரு சில ஊர்களில், ஒரு சில தியேட்டர்களில், ஒரு சில காட்சிகளுக்கு மட்டுமே 50 சதவீத இருக்கைகள் நிரம்பியுள்ளன.
ஆனால், 'மாஸ்டர்' போன்ற படங்களுக்கு, அதுவும் பொங்கல் விடுமுறை நாள் என்பதால் முதல் நான்கைந்து நாட்கள் 50 சதவீத இருக்கைகளுக்கு ரசிகர்கள் வர வாய்ப்புண்டு. எனவே, மத்திய அரசு கடைபிடிக்கச் சொல்லும் அனைத்து பாதுகாப்பு வழிமுறைகளையும் தியேட்டர்காரர்கள் சரியாகச் செய்வார்களா என்பதை யார் பொறுப்பேற்று சரியாக கவனிப்பார்கள் என்ற சந்தேகம் பெற்றோர்களிடம் ஏற்பட்டுள்ளது.
இப்போதெல்லாம் இளைஞர்கள்தான் தியேட்டர்களுக்கு அதிகம் வருகிறார்கள். 'மாஸ்டர்' மற்றும் 'ஈஸ்வரன்' படத்தைப் பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் பல இளைஞர்களுக்கு ஏற்பட்டுள்ளது என்பதை சினிமா ரசிகர்களிடம் பேசுவதிலிருந்து புரிந்து கொள்ள முடிகிறது.
ஆனால், அந்த இளைஞர்களின் பெற்றோர்களுக்கு தங்கள் பிள்ளைகள் மீதுள்ள அக்கறையால் பயம் இயல்பாக வந்துவிடுகிறது. சிலரது வீட்டில் அப்படி படம் பார்க்கப் போனால் பத்து நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு இருக்க வேண்டும் என்று சொல்வதாகவும் நமக்குத் தகவல் கிடைத்துள்ளது.
சினிமா என்பது ரசிகர்களை நம்பி மட்டுமே உள்ளது. அந்த ரசிகர்கள் தியேட்டர்களுக்கு நம்பிக்கையுடன் படம் பார்க்க வரலாம் என்ற நம்பிக்கையை தியேட்டர்காரர்களும், திரையுலகினரும் எப்படி ஏற்படுத்தப் போகிறார்கள்?.